தனுஷ் அரசியல் பயணம் திருப்புமுனையாக இருக்காது.. விஜய் கூட போட்டி போட முடியாது.. மரிய வில்சன் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷின் அரசியல் பயணம் திருப்புமுனையாக இருக்காது என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தனுஷால் ஒரு போதும் விஜய்யுடன் போட்டி போட முடியாது என்று கூறியுள்ள மரிய வில்சன், விஜய் ஒருவர் தான் எப்போதும் முதல்வர் என்றும் கூறியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கும் பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. முதலில் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய தனுஷ், அடுத்ததாக தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்தி இருக்கிறார். இதனிடையே டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட தனுஷ், அங்கு சில முக்கிய அரசியல்வாதிகளை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

Dhanush

மறுபக்கம் அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தனுஷிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதிமுகவை நோக்கியும் தனுஷ் வரலாம், அதிமுகவும் தனுஷை நாடி செல்லலாம் என்று ஆச்சரியம் அளிக்கும் வகையில் பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தனுஷ் மற்றும் அதிமுக தலைமை என்று இரு தரப்புமே அமைதி காத்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், தவெகவுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்து பேசுகையில், விஜய்க்கு போட்டியாக நடிகர் தனுஷால் வர முடியாது. எப்போதுமே முதல்வர் விஜய் தான். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது அவர்களின் முடிவு. தவெகவுக்கு திமுக மற்றும் அதிமுகவே போட்டி கிடையாது.

அப்படி இருக்கும் போது புதிதாக அரசியல் கட்சி தொடங்கி எப்படி போட்டியாக வர முடியும். அவரை எனக்கு நன்றாகவே தெரியும். தனுஷ் ஒரு முடிவு எடுத்துள்ளார். ஆனால் வரும் நாட்களில் தான் அந்த முடிவு சரியா, தவறா என்பது தெரியும். 2026லேயே கூட்டணி அமைத்தும் கூட தவெகவை வீழ்த்த முடியவில்லை. தற்போது ஒரு நட்சத்திர நடிகரை வைத்து முயற்சிக்கிறார்கள்.

புதிதாக ஒரு கணக்கு போட்டு நம்புகிறார்கள். ஆனால் அது திருப்புமுனையாக இருக்காது. காலம் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டது. 2026ல் கூட ஒரு நடிகர் ட்வீட் போட்டார்கள். இருப்பினும் களம் யாருக்கு சாதகமாக மாறியது. 1991, 1996, 1999 என்று எத்தனையோ தேர்தலை பார்த்துவிட்டோம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+