ஏன் நானெல்லாம் அரசியலுக்கு வரக் கூடாதா? வதந்திக்கு தீனி போட்ட தனுஷ்! பற்றி எரியுது சோசியல் மீடியா!
சென்னை: சமூக வலைதளங்களை திறந்தாலே நடிகர் தனுஷ் குறித்த பதிவுகளை தான் பார்க்க முடிகிறது. சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சு அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்கின்றனர். "நானெல்லாம் போயஸ் கார்டனில் விடு வாங்க கூடாதா?" என்ற தனுஷின் முதல் பேச்சு.. தற்போது நான் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற தொனிக்கு மாறி இருப்பதாக கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் காப்பி பேஸ்ட் கலாச்சாரம் எப்போதுமே இருந்திருக்கிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படம் எடுப்பது, ஒரு பாடல் வெற்றி பெற்றால் அதே பாணியில் பாடல்கள் எடுப்பது என அடுத்தடுத்து காப்பி பேஸ்ட் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

அரசியலும் அப்படித்தான் நடிகர். புரட்சி தலைவர், மக்கள் திலகம் என மக்களால் அழைக்கப்பட்ட நடிகர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயமாய் மாறிப்போனது.
அதை பார்த்து சிவாஜி கணேசன் தொடங்கி டி ராஜேந்தர், பாக்கியராஜ், கார்த்திக், சரத்குமார் என பலரும் கட்சி ஆரம்பித்து சூடு போட்டுக் கொண்டனர். ஆனால் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய்.
தமிழக அரசியல்
நடிகராக இருந்து எம்ஜிஆர்க்கு பிறகு.. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆர்-ஐ விட மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆருக்கு திமுக என்ற அடையாளமும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், கூட்டணி பலமும் இருந்தது. ஆனால் நடிகராக இருந்து கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் கூட்டணியே இல்லாமல் விஜய் ஆட்சியை பிடித்திருக்கிறார். இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிடவில்லை.
தனுஷ்
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நடிகர் தனுஷின் பெயர் தற்போது சினிமா களத்தில் மட்டுமல்லாது அரசியல் தளத்திலும் அடிபட தொடங்கி இருக்கிறது. அரசியல் வருகை குறித்து தனுஷ் நேரடியாக பேசவில்லை என்றாலும் அவரது பேச்சு அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இருக்கிறது என்கின்றனர். எம்ஜிஆரும் சிவாஜிகணேசனும் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் - சிவாஜி
ஆனால் சிவாஜி கணேசனால் அரசியலில் அப்படி ஜொலிக்க முடியவில்லை. தற்போது விஜய் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தோடு குடும்பங்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் நடத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது பேசிய அவர், "தட்டிக் கொடுங்கள் தட்டி விடாதீர்கள்" என பேசினார். மேலும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நானெல்லாம் போயஸ் கானலில் விடு வாங்க கூடாதா என பேசியது போல தற்போது நான் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற தொனியில் தான் அவர் பேச்சு இருக்கிறது என்கின்றனர்.
தனுஷ் அரசியல்
அரசியலுக்கு வருவதாக தனுஷ் சொல்லாவிட்டாலும் அவரது பேச்சு அரசியல் வருகைக்கான முன்னோட்டம் தான் என்கின்றனர். தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு தற்போது எழுந்ததல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்பு நற்பணி இயக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கொடி அவரது அரசியல் வருகை பற்றிய வதந்திகளை அதிகப்படுத்தியது. வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்கள் கொண்ட பின்னணியில் தனுஷின் உருவப்படம் மற்றும் சில வாசகங்கள் இடம்பெற்று இருந்தது அந்த வதந்திக்கு தீனி போட்டது.
அரசியல் வாடை
அசுரன் திரைப்படத்தில் ஆதிக்க சாதி எதிர்ப்பு, கொடி படத்தில் நேரடி அரசியல் பஞ்ச், கர்ணன் - கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் என தனுஷின் பல்வேறு படங்களில் அரசியல் வாடை வீசியது இந்த பேச்சுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ இன்னும் சிறிது காலத்துக்கு அது தொடர்பான பேச்சுகள் அதிகமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications
