தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. நாங்கள் ஓட்டு போட்டு கண்டிப்பாக வெல்ல வைப்போம்! ரசிகைகள் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வாக்களித்து அவரை வெல்ல வைப்போம் என்று அவரின் ரசிகைகள் பேசி இருக்கிறார். தனுஷிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதாக கூறிய ரசிகை, அரசியலுக்கு வந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலமாக விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். தவெக அரசியல் கட்சியை தொடங்கிய 2 ஆண்டுகளில் விஜய் ஆட்சியை பிடித்திருப்பது தமிழக அரசியலில் புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இன்னும் சில நடிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

குறிப்பாக நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக தனுஷ் வலிமைப்படுத்த தொடங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுப்பதோடு, விருந்து சாப்பாடு ஏற்பாடு செய்து, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு பேக் உள்ளிட்டவை வழங்கி வருகிறார்.
2 நாட்களுக்கு முன் திருவள்ளூரில் நடந்த தனுஷ் பிறந்தநாள் விழாவில் அவரின் ரசிகர்கள் பலருக்கும் ஆட்டோ வழங்கினார். அதுமட்டுமல்லாமல் சில வாரங்களுக்கு முன் தனுஷ் தனது ரசிகர் மன்றக் கொடியை அறிமுகம் செய்தார். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் விஜய்யை போல் தனுஷ் அரசியல் பிரவேசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடிகர் தனுஷ் 43வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவரை பார்க்க அவரின் ரசிகர்கள் போயல் கார்டன் இல்லம் முன்பாக கூடினர். அப்போது பால்கனியில் இருந்து ரசிகர்களை சந்தித்த தனுஷ், பின்னர் வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களின் மாலையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த ரசிகை ஒருவரிடம் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த ரசிகை, தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஆதரவு அளிப்போம். நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.. கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை உள்ளது. தனுஷ் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக வாக்களித்து வெல்ல வைப்போம். மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தனுஷ் அரசியலுக்கு வரலாம்.. மக்களுக்கு நல்லது செய்வார்.. தனுஷை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.. நாங்கள் ஆதரவு அளிப்போம்.. நான் ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அவரின் ரசிகர்கள் இப்போதே தனிஷின் அரசியல் வருகைக்காக தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
