அண்ணாமலை, டிடிவி விலகல்.. திமுகவிற்கு சாதகமாகிறதா களம்? என்டிஏ கூட்டணியில் நடப்பது என்ன?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் தேத்தலில் போட்டியில்லை என்று விலகி வருகிறார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து திடீர் விலகல் மற்றும் டி.டி.வி தினகரன் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பு, என்.டி.ஏ கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அனோகமாக அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் எல்லாம் தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு வந்துவிடும். அப்படி தேர்தல் குறித்த அறிவிப்பு வருவதற்குள் கூட்டணியைஇறுதி செய்வது, ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, யாருக்கு எந்த தொகுதி என்று இறுதி செய்யும் பணி நடக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ளவர்கள் அப்படியே தேர்தலில் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர தோற்ற தொகுதிகளிலும் களம் இறங்கும் வாய்ப்பு அதிகம். அங்கு தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தவிக்கும் அதிமுக தலைவர்கள்
மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியிலும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை சிட்டிங் எம்எல்ஏக்கள், செல்வாக்கான தலைவர்கள் ஏற்கனவே வார் ரூம் அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்கள். ஆனால் மற்ற தொகுதிகளில் சீட் கூட்டணிக்கு போகுமா அல்லது அவர்களுக்கே கிடைக்குமா என தெரியாத நிலையில் அதிமுக தலைவர்கள் இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சனங்கள்
இதனால் சுணக்கம் நிலவுவதாக கூறப்படுகிறது. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை டி.டி.வி தினகரன் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார். அதேபோல் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய தலைவர்கள் போட்டியிட மறுப்பதை காரணம் காட்டி, என்டிஏ தடுமாறுகிறது என்றும், இது வாக்காளர்களுக்குத் தவறான சமிக்ஞையை அனுப்பும், இது திமுகவுக்குச் சாதகமானது என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கிறார்கள். இது தொடர்பான கருத்துக்களை பார்ப்போம்.
அண்ணாமலையின் விலகல்: பின்னடைவா?
பா.ஜ.க-வின் முகமாகவும், ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தவருமான அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து திடீரென விலகி உள்ளார். அண்ணாமலை போன்ற பாஜகவின் முன்னணி தலைவர் களத்தில் இருந்து தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ விலகுவது, அந்தக் கட்சியின் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். "மாற்றம் வரும்" என்று நம்பிய வாக்காளர்களுக்கு, தலைமைப் பொறுப்பில் இருப்பவரே விலகுவது ஒரு பலவீனமான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.
டி.டி.வி தினகரனின் முடிவு: வாக்குகளின் கதி என்ன?
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பு, தென் மாவட்டங்களில் உள்ள அந்தக் கூட்டணியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஒரு கூட்டணிக் கட்சியின் முதன்மைத் தலைவர் களத்தில் இல்லாதபோது, அந்தத் தொண்டர்கள் மாற்றுத் திசையை நோக்கிச் சிந்திக்கத் தொடங்குவது இயல்பு என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாக்காளர்களுக்குச் செல்லும் 'தவறான சமிக்ஞை'
தேர்தல் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது ஒரு "மனோபாவம்" ஆகும். ஒரு கூட்டணி வெற்றி பெறும் என்ற பிம்பம் இருந்தால் மட்டுமே, நடுநிலை வாக்காளர்கள் அந்தப் பக்கம் திரும்புவார்கள். ஆனால், முக்கியத் தலைவர்களின் அடுத்தடுத்த விலகல், "இந்தக் கூட்டணி இன்னும் வலுப்பெறவில்லை" அல்லது "உள்முகப் பூசல்கள் அதிகம்" என்ற பிம்பத்தை வாக்காளர்கள் மத்தியில் விதைத்துவிடும் என்று அரசியல் நிபுணர்கள் விமர்க்கிறாகள்
தி.மு.க-விற்கு சாதகமாகுமா?
பொதுவாக எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்போதும், வலுவான மாற்றாக ஒரு கூட்டணி உருவாகாதபோதும், அது ஆளுங்கட்சிக்கே லாபமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி தனியாகவும், விஜய்யின் தவெக தனியாக நிற்பதும், சீமான் தனித்து நிற்பதும், கணிசமான இளம் வாக்காளர்கள், திமுக எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் தனித்தனியாக பிரியும். அப்படி அமைவது என்பது தி.மு.க-விற்குப் பெரும் லாபமாக அமையும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
என்டிஏவில் தடுமாற்றம்
இப்படியான சூழலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடவில்லை என்றால், என்.டி.ஏ கூட்டணியில் தடுமாற்றம் ஏற்பட்டதாக கருத்துக்கள் பரவும். அப்படி பரவும் போது அதிருப்தி வாக்குகளை ஒருமுகப்படுத்தாமல் சிதறடிக்கும். இது தி.மு.க-விற்கு எளிதான வெற்றியைத் தேடித்தரக்கூடும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முக்கிய தலைவர்கள் களத்தில் இல்லை என்றால், தி.மு.க-விற்கு எதிரான விமர்சனங்களின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதுவும் திமுகவிற்கு சாதகமாக மாறும் என்கிறார்கள்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications