முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா?.. சரவணன் விஷயத்தில் பாஜகவை கிண்டல் செய்த ப சிதம்பரம்!
சென்னை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகிய விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். ‛‛ முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். திமுகவில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்த இவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு
இந்நிலையில் தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் திடீரென்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வீரமரணம் அடைந்த ராணுவவீரர் லட்சுமணனுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினர் இடையே வார்த்தைபோர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசப்பட்டது.

பாஜகவில் இருந்து விலகிய சரவணன்
இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் , நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினார். மேலும் மதஅரசியல் தனக்கு ஒத்துவராது என அவர் கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கம்
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்டை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எனக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ப சிதம்பரம் கிண்டல்
இந்நிலையில் தான் டாக்டர் சரவணன் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம், பாஜகவை கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார். டாக்டர் சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?. வாழ்க சுதந்திரம்!'' என கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications