Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கீதா விஜய் அடுத்த அதிரடி முடிவு.. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதுதான் நேற்று மாலை முதலே சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. சங்கீதா மற்றும் விஜய் குறித்த விமர்சனங்கள் எல்லை மீறி போகின்றன. இந்த சூழலில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விவகாரத்து தொடர்பான செய்திகளை வெளியிட்டால் மனதளவில் பாதிக்கப்படுவேன். எனவே இது தொடர்பான செய்திகளை டிவி, நாளிதழ்கள் மற்றும் யூடியூப் மறும் பேஸ்புக், இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் பரவி வந்தது.

Did you notice the affidavit filed by Sangeetha Vijay in court

இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஏனெனில் மேலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. குறிப்பாக ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டிற்கு சங்கீதா வரவில்லை. விஜய் கடைசியாக நடித்த படம் தான் ஜனநாயகன். அதற்கே சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகள் வரவில்லை.

சங்கீதா மனு

நடிகர் விஜய்யும் அரசியல், பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தனியாகவே சென்று வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறுகையில்,"எனக்கும், ஜோசப் விஜய்க்கும் இங்கிலாந்தில் கடந்த 10-7-1998 அன்று பதிவு திருமணம் நடந்தது. அதன்பின்பு சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 25-8-1999 அன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. நான் இங்கிலாந்து குடியுரிமை பெற்று பி.எஸ்.சி. பயோமெடிக்கல் சயின்ஸ் படித்திருக்கிறேன்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

ஜோசப் விஜய்யுடன் சென்னை சாலிகிராமம் வீட்டிலும், பின்னர் அடையாரில் கஸ்தூரிபா நகரிலும், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வீட்டிலும் வசித்து வந்தேன். எனது கணவர் தமிழ் திரையுலகில் மிகப் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். எனது கணவர் கடந்த 2024-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளார். எங்களுக்கு சஞ்சய் (வயது 25) என்ற மகனும், திவ்யா (20) என்ற மகளும் உள்ளனர். நாங்கள் ஆரம்பக்கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தோம்.

நடிகையுடன் தொடர்பு

நாங்கள் இருவரும் அடிக்கடி இங்கிலாந்துக்குச் சென்று வந்தோம். சினிமா நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு என்னை அவர் அழைத்துச் சென்று வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டது எனக்கு தெரியந்தது. இது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

விஜய் தந்த உறுதி

இது தொடர்பான பேசிய போது, அந்த நடிகையுடன் தொடர்பைக் கைவிடுவதாக என் கணவர் விஜய் உத்தரவாதம் அளித்தார். ஆனாலும் அதன்பின்னர் அந்த நடிகையோடு தொடர்பு வைத்து மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தினார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் என்னை அலட்சியம் செய்து, வீட்டை விட்டு வெளியேறும் வகையில் செயல்பட்டு, என்னைத் தனியாக வசிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டார். அதேநேரம் வெளிநாடுகளுக்கு அந்த நடிகையுடன் அடிக்கடி சென்று வந்தார். அந்த நடிகையும், எனது கணவரோடு வெளிநாடு சென்ற புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியிட்டார். எனது கணவர் இந்த புகைப்படத்தை மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால் அதனை மறைமுகமாக ஆதரிக்கும் வகையியே இருந்தார்.

நடிகையின் பெயர்

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி எனக்கும், எனது மகன், மகளுக்கும் மிகப்பெரிய வேதனையை அளித்தது. அந்த நடிகையோடு எனது கணவர் சுற்றுவதால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய தர்மசங்கடத்தையும், உணர்ச்சிபூர்வமான வேதனையையும் தந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரது கண்ணியத்தைப் பாதுகாக்கவும், தேவையில்லாத விளம்பரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாகவும் தற்போது அந்த நடிகையின் பெயரை நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் இந்த வழக்கில் அந்த நடிகையின் பெயரை எதிர் மனுதாரராகச் சேர்க்க அனுமதி வழங்க வேண்டும்.

விஜய்க்கு சம்மன்

நடிகையுடன் உள்ள தொடர்பினால் எனது கணவர் ஜோசப் விஜய்யுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை நடத்துவது எனக்கு மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி இரு தரப்பு வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுக்கு வரவில்லை.எனவே தான், நான் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு இந்த மனுவைத் தாக்கல் செய்கிறேன்" இவ்வாறு சங்கீதா விஜய் அதில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஏப்ரல் மாதம் 20-ந்தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். அப்போது விஜய் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

சங்கீதா எடுத்த அதிரடி முடிவு

இதனிடையே சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விஷயங்களை பேசக்கூடாது என்ற வரன்முறை இல்லாமல் இருக்கிறது. சங்கீதா மற்றும் விஜய் குறித்த விமர்சனங்கள் எல்லை மீறி போகின்றன. இந்த சூழலில் சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், விவகாரத்து தொடர்பான செய்திகளை வெளியிட்டால் மனதளவில் பாதிக்கப்படுவேன். எனவே இது தொடர்பான செய்திகளை டிவி, நாளிதழ்கள் மற்றும் யூடியூப் மறும் பேஸ்புக், இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+