பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு
சென்னை: இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

தினமும் காலை எழுந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்தியை காண முடிகிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது வாகன ஓட்டிகளை கவலை அடைய செய்துள்ளது.
இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.99க்கும், டீசல் ரூ. 79.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
[மாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல்]
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே போன்று தொடர்ந்து நடந்தால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ. 100-ஐ தொடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications