சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஏய்.. வெளியே ஓடு".. வெடித்த கனகசபை விவகாரம்.. முரண்டு பிடிக்கும் தீட்சிதர்கள்.. பாலகிருஷ்ணன் சுளீர்

தீட்சிதர்கள் முரண்டு பிடிக்ககூடாது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தீட்சிதர்கள் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பது சரியில்லை என்று சிபிம் கட்சியின் பாலகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது... கோயிலில் இருக்கும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வது கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது.

அக்கோயிலின் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.. எனினும், சில மாதங்களுக்கு முன்பு ஜெயசீலா என்ற பெண் கனகசபையில் ஏறி வழிபட சென்றார்.

கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு - சட்ட போராட்டம் நடத்த ஆலோசனை கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு - சட்ட போராட்டம் நடத்த ஆலோசனை

 வெளியே ஓடு

வெளியே ஓடு

இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.. அவரை பார்த்ததுமே, ""ஏய்.. வெளியே ஓடு, யாரு உள்ளே விட்டது".. சாதியை சொல்லி தீட்சிதர்கள் பெண்ணை திட்டியதாகவும், தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டதாகவும் வலைதளங்களில் செய்திகள் பரவின... கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி தரிசனத்துக்கு தடை விதிப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் கூறப்பட்டது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்நிலையில் தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்தும், பக்தர்கள் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்தின.. இதையடுத்து, கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு நேற்று அரசாணை வெளியிட்டது... நீண்ட நாள் கழித்து வெளியான இந்த அறிவிப்பினால், பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீட்சிதர்கள்

தீட்சிதர்கள்

ஆனால், அரசாணை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, அரசாணை குறித்து விவரம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை அலுவலகத்துக்கு அழைப்பு விடுத்து, சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூட்டம் நடத்தினார்... இதில் கலந்து கொண்ட தீட்சிதர்கள், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறினார்கள்.. அப்போது, அங்கு வந்த கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், "தமிழக அரசின் அரசாணை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. யாராவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" கூறினார்.

 சிபிம்

சிபிம்

தொடர்ந்து நடராஜர் கோயில் உள்ளேயும், வளாகத்தை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கனகசபை

கனகசபை

"சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அது இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரம்பத்தில் விஐபி தரிசனம் மட்டுமே கனகசபை மீது அனுமதிக்கப்பட்டது, பின்பு பொதுமக்கள் அனைவரும் வழிபட்ட நிலையில் யாருக்கும் அனுமதி இல்லை என்ற முடிவை தீட்சிதர்கள் எடுத்தனர்.

முரண்டு

முரண்டு

இதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன, இந்த விஷயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி கனகசபை மீது ஏறி அனைவரும் வழி விடலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் இப்போதும் இந்த முடிவுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் எதற்கெடுத்தாலும், இவ்வாறு அவர்கள் முரண்டு பிடிக்கும் நிலை சரியானது அல்ல. ஆகினும் உறுதியாக இருந்த அரசாங்கம் உத்தரவை உடனடியாக அமல்படுத்தி மக்கள் வழிபடுவதை உறுதி செய்திட வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Dikshitakars disregarding government orders, says cpm k balakrishnan and tweeted தீட்சிதர்கள் முரண்டு பிடிக்ககூடாது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X