இளையராஜாவுக்கு ஒன்றல்ல.. 5 பாரத ரத்னா விருது கூட கொடுக்கலாம்! திடீரென புகழ்ந்து தள்ளிய அமீர்
சென்னை : இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது எனவும், அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.

இளையராஜா சர்ச்சை
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.

பாஜக ஆதரவு
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பிய நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஆதரவு கொடுத்தார். குறிப்பாக இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜா பேசியது சரிதான் எனவும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பாரத ரத்னா விருது
மேலும் பாரத ரத்னா விருது வழங்கக் கோரி தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுத தயராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அண்ணமாலையின் இந்த பேச்சுக்கும் விமர்சனங்கள் எழுந்தது. விருதுக்காக அவர் பிரதமரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இந்நிலையில் இளையராஜாவுக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

இயக்குனர் அமீர்
சென்னையில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமீர், இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது. அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது. மொழி தெரியாதவர்கள் கூட பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ பெரியது கிடையாது. இளையராஜா இங்கு இருந்தால் கூட நான் இந்த கருத்தை கூறியிருப்பேன்" என்றார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
உயிரையே கொண்டு வந்துடுவாரு.. எஸ்பிபி செய்ததை மறக்க முடியுமா? பிறந்தநாளில் இளையராஜா உருக்கம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications