“ஈவிகேஎஸ் விமர்சிப்பதும் கி.வீரமணி கைதட்டுவதும்” அதுவும் பெரியார் மேடையில்? பா.ரஞ்சித் கடும் கண்டனம்
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.

இசையமைப்பாளர் இளையராஜா
ஆனாலும், அவரது கருத்து அவ்வளவு சீக்கியம் ஓயவில்லை, பல அரசியல் தலைவர்கள் அதனை மையமாக வைத்து கருத்து தெரிவிக்க அது மீண்டும் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது. சாதிய மனநிலையில் இளையராஜாவை அவர் ஒருமையின் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை
ஈரோட்டில் நடந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

சாதிய மனநிலை பேச்சு
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்" என ஒருமையில் பேசினார்.

பா.ரஞ்சித் கண்டனம்
அவரது இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது." என பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications