தமிழக மக்கள் ஏங்கிட்டு இருந்தாங்க.. வந்தாரு பாருங்க..! மக்கள் முதல்வர்னா ஸ்டாலின் தான் - செல்வராகவன்
சென்னை : இப்படிப்பட்ட ஒரு முதல்வர் வரமாட்டாரா என்று நெடுநாளாக தமிழக மக்கள் ஏங்கியிருந்த நிலையில், மக்கள் முதல்வர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான் எனவும்,தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது முதலமைச்சரால் தான் முடியும் என இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
சென்னை டி டி கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில், ' தி மேன் - வூ வுட் நாட் பி கிங் - வி.பி.ராமன்' என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது.

புத்தக வெளியீட்டு விழா
ஆனால் லேசான காய்ச்சல் காரணமாக முதல்வர் பங்கேற்காத நிலையில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு முதலமைச்சரை உரையினை வாசித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நடிகர் ரஜினிகாந்த் அரவிந்த்சாமி இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

முதல்வரின் உரை
முதல்வரின் உரையில்," சுயசரிதை நூலை வி.பி.ராமன் எழுதியிருந்தால், அதனை அப்போது கலைஞரே வெளியிட்டு இருப்பார். தற்போது அவரது மகன் எழுதியுள்ளதால், கலைஞரின் மகனான நான் வெளியிடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். மகுடம் மருத்துவராக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் முடிசூடா மன்னனாக இருந்து மறைந்தவர் வி.பி.ராமன். பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் வி.பி.ராமன் சென்றது இந்த நூலில் பதிவிடப்பட்டு உள்ளது.

இயக்குனர் செல்வராகவன்
நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய இயக்குனரும் தற்போது நடிகர் அவதாரம் எடுத்திருப்பவருமான செல்வராகவன், " எனக்கு சிறுவயது முதலே முக ஸ்டாலின் மிகவும் பிடிக்கும் .. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் மக்களின் முதல்வர் என்றும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கி இருந்தார்கள். தமிழ்நாடு உலகிலேயே சிறந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நமது முதலமைச்சரால் தான் முடியும்" என்றார்.

விரைவில் புதுப்பேட்டை 2
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்கள் விரைவில் உருவாக்கப்படும். ரசிர்களின் எதிர்பார்ப்பை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் படத் தயாரிப்பு வேலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். பல வருடங்களாக புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்கள் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், செல்வராகவும் மவுனம் கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications