மகளிர் வாக்குகள்.. திமுகவுக்கு விஜய்யால் வந்த நெருக்கடி.. புதிய வியூகம் வகுத்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 38 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளர்கள் என்ற வகையில், 40 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என்று திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மகளிர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யவே திமுக இப்படியோரு வியூகத்தை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. கரூர் விவகாரம் காரணமாக விஜய்க்கு சில பின்னடைவு ஏற்பட்டாலும், சாமானிய மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருந்து வருகிறது. அண்மையில் திமுக நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய்க்கு 23 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிய வந்தது.

2026 சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து திமுக தரப்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிரை வாக்குகளை மையப்படுத்தி மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டன. அதேபோல் இளைஞர்களை கவரும் வகையில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு கைக் கொடுத்தது.
ஆனால் தவெக களமிறங்கி இருப்பதால், மகளிர் மற்றும் இளைஞர்களின் ஆதரவு குறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. திமுக எடுத்த கருத்துக் கணிப்புகளில் இது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மகளிரின் வாக்குகளை கவர்வதற்காக திமுக தலைமை முக்கிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.
திமுகவில் தற்போது 6 பெண் எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால் இந்த தேர்தலில் திமுக தரப்பில் அதிகளவில் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினின் அழுத்தம் காரணமாக இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்ட போதே, பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது 38 மாவட்டங்கள் இருக்கிறது என்றால், மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் திமுக தலைமை தரப்பில் 40 முதல் 50 பெண்களுக்கு திமுக தரப்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தேச பட்டியலை மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து கேட்டிருக்கிறது.
ஏற்கனவே புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனால் அடுத்தடுத்து மகளிரை குறி வைத்து இன்னும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications