• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செந்தில்பாலாஜி சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்!

|
  DMK MLA's Sworn | திமுக சட்டசபை உறுப்பினருக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார் தனபால்- வீடியோ

  சென்னை: செந்தில்பாலாஜி பதவி ஏற்கும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.. ஆனால் இதே புன்னகை சபாநாயகர் முகத்திலும் தென்பட்டதுதான் ஆச்சரியமே!

  சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிகளுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ரொம்பவும் அரிதான விஷயம்.

  தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திமுக இப்படி ஒரு மனுவை கொடுத்துள்ளதால், அரசியல் களம் தகித்து உள்ளது. ஆட்சியை கவிழ்க்க திமுக முயன்று தோற்றுள்ளது. ஆட்சியை தப்ப வைத்தும், நிம்மதியின்றி தவித்து வருகிறது அதிமுக தரப்பு! இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக இனி கொண்டு வருமா என்று தெரியவில்லை.

  காங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா? சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்?

  சபாநாயகர் தனபால்

  சபாநாயகர் தனபால்

  இந்த சமயத்தில்தான், புதிய திமுக எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். யார் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னார்களோ, அதே சபாநாயகர் தனபால் முன்னிலையில்தான் பதவியேற்பு விழா நடந்தது. ஒவ்வொரு எம்எல்ஏ முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது. காரணம், இவர்கள் அத்தனை பேரும் அதிமுகவிடமிருந்து தொகுதிகளைப் பறித்து வென்றவர்கள்.

  துரைமுருகன்

  துரைமுருகன்

  கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போதும்போல் ஸ்மைலிங் செய்து கொண்டே இருந்தார். இதில் முக்கியமான மேட்டர் என்னவென்றால், தனபால் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு! வழக்கமாக சபையில் துரைமுருகன் என்ன காமெடியாக பேசினாலும் உடனடியாக மனசு விட்டு சிரித்து விடுவார் தனபால். ஆனால் நேற்று துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை போல தெரிகிறது. நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலுவுடன் ஸ்டாலின் உட்கார்ந்திருந்தார். சபாநாயகர் முறைப்படி எழுந்து நின்று எம்எல்ஏக்களுக்கு பதவிபிரமாணத்தை செய்து வைத்தார்.

  செந்தில் பாலாஜி

  செந்தில் பாலாஜி

  பதவி ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ஸ்டாலின் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். அதிலும் செந்தில் பாலாஜி பதவியேற்கும்போது சபாநாயகர், ஸ்டாலின், என அங்கிருந்தோர் அனைவருமே ஏக பூரிப்பில் இருந்தனர். அனைத்தும் முடிந்தபிறகு, சபாநாயகருடன் ஸ்டாலின் சிறிது நேரம் பேசினார்.

  நம்பிக்கை இல்லா தீர்மானம்

  நம்பிக்கை இல்லா தீர்மானம்

  ஒரு பக்கம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துவிட்டு, மறுபக்கம் மலர மலர சிரித்தபடி சபாநாயகருடன் மகிழ்ந்து பேசியது கலகலப்பாக இருந்தது. அரசியல் நாகரீகமாக இதை கருத வேண்டியுள்ளது. அதேசமயம், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்னாகும் என்ற கேள்வியும் எழுகிறது.. ஸ்டாலின் சொன்னது போல வெயிட் அண்ட் சீ!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  DMK new-MLAs sworn as legistators in Tamilnadu in the presence of the Speaker Dhanapal. Party leader MK Stalin, TR Balu, Nehru, Ponmudi participated in this event
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more