சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக 174 தொகுதிகளில் போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறார்கள்.

இதில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக

60 தொகுதிகள் ஒதுக்கீடு

60 தொகுதிகள் ஒதுக்கீடு

இந்த நிலையில் திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 174 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே தமிழகத்தில் 187 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது.

3 தொகுதிகள்

3 தொகுதிகள்

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி

தமிழக வாழ்வுரிமை கட்சி

அது போல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 178 இடங்களில் திமுக போட்டியிட்டது.

174 தொகுதிகளில் போட்டி

174 தொகுதிகளில் போட்டி

இந்த முறை 4 தொகுதிகளை குறைத்து கொண்டு 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளில் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும். அதன் பின்னர் வேட்பாளர் அறிவிப்புகள் வெளியாகும்.

English summary
DMK will constest in 174 constituencies in Tamilnadu. DMk allots 60 seats for alliance parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X