சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட்டியில்லா கடன், ஆட்டோ வாங்க 10 ஆயிரம்.. திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஏழை வணிகர்களுக்கு 15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவழங்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும், சிறுகுறு விவசாயிகள் மின் மோட்டார் வாங்கிட 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும், ஆட்டோ வாங்க 10 ஆயிரம் வரை மானியம், கல்வி கடன் ரத்து, டவுன்பஸ்களில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இன்று அண்ணா அறிவலாயத்தில் அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

ஸ்டாலின் அறிவித்த அறிக்கையின் சில முக்கியமான அம்சங்களை இப்போது பார்ப்போம்.

பேறுகால உதவித்தொகை

பேறுகால உதவித்தொகை

  • கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களின் குடுமபத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • பத்திரிக்கையாளர்கள் நலம் காக்க தனி ஆணையம்
  • சிறுகுறு விவசாயிகள் மின் மோட்டார் வாங்கிட 10 ஆயிரம் மானியம்
  • ஆட்டோ வாங்க 10 ஆயிரம் வரை மானியம்
  • பேறுகால உதவித்தொகை 24 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்
தனிச்சட்டம்

தனிச்சட்டம்

  • வேலைவாய்ப்பில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.
  • புதிதாக 2லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • தமிழத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவழங்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்
  • தொழில் தொடங்க வேலையில்லா பட்டதாரிகளுக்கு 20லட்சம் வரை கடன் வழங்கப்படும்
  • புதிய கனிமவள அமைச்சகம் தொடங்கப்படும். அரசே கனிம வளங்களை நடத்தும்
  • மாணவர்களுக்கு கைகணிணி வழங்கப்படும்
வட்டியல்லா கடன்

வட்டியல்லா கடன்

  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
  • கரும்புக்கு குவிண்டால் விலை 4000 ஆக உயர்த்தப்படும்
  • 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறு தடுப்பணைகள் கட்டப்படும்.
  • ஏழை வணிகர்களுக்கு 15 ஆயிரம் வரை வட்டியல்லா கடன் வழங்கப்படும்.
 மகளிருக்கு இலவசம்

மகளிருக்கு இலவசம்

  • அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்
  • மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்
  • கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • மகளிர் அரசு டவுன்பஸ்களுக்கு கட்டணமில்லா பயண வசதி செய்து தரப்படும்.
வெளிநாட்டு வாழ் தமிழர்கள்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள்

  • திருக்குறளை தேசிய மொழி ஆக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
  • அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும்
  • 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டம் மூலம் மக்களின் குறைகள் 100 நாட்களில் தீர்க்கப்படும்
  • சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்
  • தமிழகத்தில் சொத்து வரை உயர்த்தப்படாது
  • சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
  • பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்
  • சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்;பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும்; 13. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும்; எரிவாயு சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும்
  • கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 லட்சத்திற்கு உள்ளான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்
  • தமிழக அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30% இல் இருந்து 40% ஆக உயர்த்தப்படும்
  • மருத்துவ படிப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்
  • ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
  • வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான தனியார் துறை உருவாக்க்கப்படும்
  • விவசாய துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
  • இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா ரூ1,000 வழங்கப்படும்
  • வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்
  • இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
  • வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டங்கள், செயலாக்கதுறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும்

English summary
dmk election manifesto 2021; check out the important points in this article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X