சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. கடும் கோபம் அடைந்த திமுக.. தக்க பதிலடி தர முடிவு

Google Oneindia Tamil News

சென்னை : கூட்டுறவு கடன் தள்ளுபடி, மாதம் ஆயிரம் உரிமை தொகை என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என பட்டியல் வாசித்து வாக்கு சேகரித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள திமுக, தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் வகுத்த வியூகம் ஓரளவு கைகெடுத்தது.

பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..! பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!

ஆ ராசா பேச்சு விவகாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது, 10.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஓரளவு கை கொடுத்தது. இதனால் அதிமுக 10 வருடங்கள் ஆட்சிக்கு பின்னரும் சட்டசபை தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்

இந்நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிராக புதிய அஸ்திரத்தை எடுத்துள்ளார். மக்களின் நாடித்துடிப்பை பிடித்து பார்க்கும் வாக்குறுதிகளான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி, முதியோர் உதவி தொகை என்று மூன்று விஷயங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், பல கண்டிசன்களை போடுவதாகவும் போகும் இடமெல்லாம் பேசி வருகிறார்,

திமுக கோபம்

திமுக கோபம்

இதனால் கடும் கோபம் அடைந்துள்ள திமுக, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்த தவறுகளையும், நிறைவேற்றாமல் விட்ட திட்டங்களையும் தயாரித்து வருகிறது. அவருக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. திமுக அரசை குறை சொல்வதை எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் தமிழக தொழில் துறை அமைச்சர், தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்

அதிமுக கூட்டம்

அதிமுக கூட்டம்

இதுகுறித்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தான், அப்போது பேசிய அவர், காஞ்சிபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய, எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எதையும் செய்யவில்லை என்று பொய்யுரைத்து வருகிறார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

திமுகவின் இந்த 4 மாத ஆட்சியில் நாங்கள் சொல்லிய 505 வாக்குறுதியில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்று பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் போல். கட்சிக்காரர் கூட்டத்தில் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் திமுக அரசு மீது இப்படி குற்றச்சாட்டு வைக்கிறார்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

நிறைவேறாத வாக்குறுதிகள்

அதிமுக ஆட்சி காலத்தில் அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தார்கள் 2011 இலிருந்து 2021, வரை சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர்கள் இருந்தார்கள். அதிமுக ஆட்சியில் 110 விதியில், 537 அறிவிப்புகளுக்கு எந்த நடவடிக்கையும் அல்லாமல் நிலுவையில் போட்டு வைத்திருக்கிறார்கள். அதிலும் 348 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிட்டு நிதி ஒதுக்காமல் விட்டுவிட்டனர். 143 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் அதற்கு ஒரு சல்லி காசு கூட அவர்கள் ஒதுக்கவில்லை. 26 அறிவிப்புகள் முற்றிலுமாக கைவிடப்பட்டது எதன் அடிப்படையில் செய்ய முடியும் என்ற ஆராய்ச்சி கூட இல்லாமல் அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

நகை கடன் மோசடி

நகை கடன் மோசடி

காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்கு, திமுக மீது குற்றம்சாட்டி வருகிறார். வேண்டும் என்று திமுக மீது குற்றம் சாட்டுகிறார். நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக அவர்களுடன் சில கூட்டு வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பற்றிய அனைத்து தகவல் சேகரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாத்தான் வேதம்

சாத்தான் வேதம்

உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லுகிறார் அதிமுக ஆட்சியில் எப்படி உள்ளாட்சி தேர்தல் நடந்தது ? எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்தைப் பற்றி அவர் பாடம் நடத்துகிறார் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. திமுக அரசை குறை சொல்வதை எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார்.

English summary
Edappadi Palanisamy has been collecting votes by reading the list as he has not fulfilled any promise of co-operative loan waiver and claim amount of Rs.1000 per month. Outraged, the DMK has warned of retaliation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X