சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருநங்கைகளுக்கு அந்தஸ்தை வழங்கினார் தந்தை.. இலவச பயண அறிவிப்பு மூலம் புரட்சியை செய்த மகன் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: திருநங்கைகளுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற ஸ்டாலின் அறிவித்துள்ளது தந்தையை போல் தங்கள் நலனில் அக்கறை கொண்டவர் மகன் என்பதை நிரூபித்துவிட்டதாக திருநங்கைகள் தெரிவிக்கிறார்கள்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. பெண்களை போல் திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

இதை கனிவுடன் பரீசிலனை செய்த முதல்வர் விரைவில் முடிவெடுப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளான இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளும் நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

திருநங்கை

திருநங்கை

இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளை இதுவரை அவர்கள் விரும்பத்தகாத பெயர்களை வைத்து மக்கள் அழைத்து வந்தார்கள்.

வேதனை

வேதனை

இதனால் திருநங்கைகள் வேதனையுடனேயே வீதிகளில் நடமாடி வந்தனர். ஆனால் அரவாணிகள் என அழைக்கப்பட்ட இவர்கள் கருணாநிதி ஆட்சியில்தான் கவுரமாக திருநங்கைகள் என அழைக்கப்படுகிறார்கள். அவரது மகனான ஸ்டாலின் ஆட்சியில் திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் என்ற அறிவிப்பு சாதாரண அறிவிப்பு , பெரும் புரட்சியாகும்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

திருநங்கைகளுக்கு வடமாநிலத்தில் இருக்கும் அங்கீகாரம் தென் மாநிலங்களில் இல்லாத நிலையே இருந்து வந்தது. இது மெல்ல மெல்ல மாறி தற்போது இவர்கள் நர்ஸ், மருத்துவர், போலீஸ் உள்ளிட்ட பணிகளில் அமர்ந்துள்ளார்கள். மேலும் திருநங்கைகளே ஒரு தன்னார்வல அமைப்புகளை ஏற்படுத்தி மிகவும் அடிமட்டத்தில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஏளனம்

ஏளனம்

தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் தங்களை எப்போதும் ஏளனமாக பார்த்து பேசிய பொதுமக்களுக்கும் இவர்கள் பல உதவிகளை செய்து வருகிறார்கள். திருச்செங்கோட்டில் திருநங்கை ஒருவர் கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் தான் அதுவும் 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் என்ற ஒன்றை கருணாநிதி தொடங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நலத்திட்டங்களை செய்து வந்தார்.

மருத்துவக் காப்பீட்டு திட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டம்


திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இது போல் விண்ணப்பங்களில் ஆண், பெண் என்பதை போல திருநங்கைகளை குறிக்க மூன்றாம் பாலினத்தவர் என தமிழிலும் டிரான்ஸ்ஜென்டர் என்ற வார்த்தையின் T என்ற எழுத்தும் குறிப்பிடப்பட்டது.

திருநங்கைகள்

திருநங்கைகள்


திமுக ஆட்சியில் திருநங்கைகளும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கருணாநிதி அவர்களுக்கு நிறைய செய்துள்ளார். அது போல் அவரது மகன் ஸ்டாலினும் தற்போதைய ஆட்சியில் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DMK has done so many schemes for transgenders in their regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X