சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது.. திமுகவின் அலட்சியப் போக்கே காரணம்.. ஓபிஎஸ் கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை: பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்ததற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பரம்பிக்குளம் - ஆழியாறு என்னும் பி.ஏ.பி. திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும் அணையை தமிழக அரசு தான் பராமரித்து வருகிறது.

இந்த அணை 17 டிஎம்சி-க்கு அதிகமாக கொள்ளளவு கொண்டது. நேற்று அதிகாலை செல்ப் வெயிட் கழன்று விழுந்ததில் அணையின் 2வது மதகு உடைந்து சேதமானது. அதில் இருந்து மளமளவென தண்ணீர் வெளியேறியது. இதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஓ பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹோட்டல் ரூமில் பெண்ணுடன் ஜாலி.. டக்குனு திரும்பினால் பக்கத்திலேயே மனைவி.. அலறிய புருஷன்.. ஓ மை காட்ஹோட்டல் ரூமில் பெண்ணுடன் ஜாலி.. டக்குனு திரும்பினால் பக்கத்திலேயே மனைவி.. அலறிய புருஷன்.. ஓ மை காட்

ஓபிஎஸ் அறிக்கை

ஓபிஎஸ் அறிக்கை

இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை அதிகமாகப் பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஒடுவதையும், அனைத்து நீரும் கடலில் சென்று கலப்பதையும் தடுக்கும் பொருட்டு, மழை நீரைத் தேக்கி வைத்து தேவைப்படும் காலத்தில் உதவுவதற்காக அணைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசிற்கு உண்டு. இந்தக் கடமையிலிருந்து மாநில அரசு தவறும்பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், விவசாயப் பணிகள் பாதிக்கின்ற அபாயமும் உருவாவது தவிர்க்க முடியாதது.

 திமுக அரசின் மெத்தனப் போக்கு

திமுக அரசின் மெத்தனப் போக்கு

அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20,000 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழுக் கொள்ளளவும் வீணாகின்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் வந்துள்ள செய்தி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் திமுக அரசின் மெத்தனப் போக்கே என விவசாயிகள் கூறுகின்றனர்.

 விவசாயப் பணிகள் பாதிப்பு

விவசாயப் பணிகள் பாதிப்பு

தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலப்பதன் காரணமாக, இந்த ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயத்திற்கு தண்ணீர் வராது என்றும், தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இனிமேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பில்லை என்றும், எனவே, இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்காக திறந்துவிட வேண்டிய தண்ணீர் வராது என்றும், தென்னை விவசாயம் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர் குறையக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக மீது விமர்சனம்

திமுக மீது விமர்சனம்

இந்த உடைப்பின் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடனடி நடவடிக்கை தேவை

உடனடி நடவடிக்கை தேவை

தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சரிசெய்யவும், இந்த ஆண்டு விவசாயத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும், இனி வருங்காலங்களிலாவது பருவமழைக்கு முன்பே அணையின் பராமரிப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
O Panneer Selvam has condemned the Damage of main shutter in Parampikkulam dam is a result of DMK government's negligence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X