சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேட்டரே வேற.. பிடிஆர் ரூமில் நுழைந்த ராஜா.. கட்டிப்பிடித்து வாழ்த்திய சீனியர்.. சபாஷ் "இணைந்த கைகள்"

பிடிஆரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் டிஆர்பி ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: நிதியமைச்சர் ட்விட்டரே பரபரத்து காணப்படுகிறது.. காரணம், அவர் போட்டுள்ள ஒரு ட்வீட்தான்.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ டிஆர்பி ராஜா, நிதியமைச்சர் பிடிஆரை சந்தித்துள்ளார்.. என்ன காரணம்?

பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் பிடிஆர்.. வெளிநாடுகளுக்கு சென்று மெத்த படித்தவர்.. தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டபோதே அனைவராலும் பேசப்பட்டவர்..

நிதித்துறை பொறுப்பை சிறப்பாகவே செய்து வருபவர்.. ஆனால், அவர் வகித்து வந்த ஐடி விங் பொறுப்பில் மட்டும் சில சலசலப்புகள் எழுந்தன.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டன.

கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்! கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

ஐடி விங்

ஐடி விங்

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரசாந்த் கிஷோரின் ஐடி விங் இங்கு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.. திமுகவின் பிரதான வெற்றியை நோக்கியே, பிரச்சாரங்களில் பிகே டீம் பயணித்தாலும், அவ்வப்போது பிடிஆர் டீமுடன் அதிருப்திகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது.. இப்படி இரு தரப்புமே சோஷியல் மீடியாவில் திமுகவின் சம்பந்தப்பட்ட செய்திகளை புரமோட் செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வர் என்பதால், இந்த உரசல்கள் பிடிஆருக்கு லேசான எரிச்சலையும் தந்ததாக கூறப்பட்டது.

மகேந்திரன்

மகேந்திரன்

பிறகு, மநீமய்யத்தில் இருந்து வந்த கோவை மகேந்திரனை, பிடிஆரின் ஐடி டீமிலேயே, பிடிஆரை கேட்காமலேயே திமுக மேலிடம் நியமித்து விட்டதாக சொல்லப்பட்டது.. இதற்கு அடுத்தபடியாக, ஐடி விங் ஆலோசகராக மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டது மேலும் அதிருபதியை பிடிஆருக்கு கூட்டியது.. இதற்காகவே பதவியை அவர் ராஜினாமா செய்ய போகிறார் என்றார்கள்..

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

ஆனால் திமுக நிர்வாகிகள் தரப்பிலோ வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டது.. "எதிர்க்கட்சிகள் இப்போதெல்லாம் நிறைய கேள்விகளை எழுப்புகிறார்கள்.. வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என துளைத்தெடுத்திருக்கிறார்கள்.. இதற்கெல்லாம் ஐடி விங் சரியான பதிலடியை தருவதில்லை.. அதனால்தான், பிடிஆர் கட்சி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும்படி, கட்சி தலைமை கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.. ஒருவழியாக பிடிஆரும் ராஜினாமா செய்துவிட்டார்.. அந்த பொறுப்பில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்..

மகேந்திரன்

மகேந்திரன்

இந்த பொறுப்பில் மகேந்திரனை நியமிக்கவே முதல்வர் ஸ்டாலின் விரும்பியிருக்கிறார்.. ஆனாலும், மாற்று கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்குத்தான் முக்கிய அதிகார பதவிகளெல்லாம் கிடைக்கிறது என்ற விமர்சனங்களை தவிர்க்கவே, டிஆர்பி ராஜாவுக்கு பொறுப்பு தேடி வந்தது.. போதாக்குறைக்கு டிஆர் பாலுவும், மகனுக்கு இந்த பதவி கிடைக்க மேலிடத்தில் அழுத்தம் தந்திருப்பதாக கூறப்படுகிறது.. இறுதியில் டிஆர்பி ராஜா தன்னுடைய புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்..

வாழ்த்து

வாழ்த்து

முதல்காரியமாக, அதே பொறுப்பில் இருந்த தன்னுடைய சீனியர் தலைவரான, பிடிஆரை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.. பிடிஆரும் சரி, டிஆர்பி ராஜாவும் சரி, இருவருமே சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர்கள்.. எனினும், தொழில்நுட்ப அணியின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிடிஆரின் ஆலோசனையையும், ராஜா கேட்டு பெறுவார் என்று நம்பப்படுகிறது..

ட்வீட்

ட்வீட்

இந்நிலையில், இன்று பிடிஆரை நேரில் சந்தித்து, வாழ்த்தையும் டிஆர்பி ராஜா பெற்றுள்ளார்.. அது தொடர்பான ட்வீட்டையும் பிடிஆர் பதிவிட்டுள்ளார். அதில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு @TRBRajaa அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் @ptrmadurai அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்" என்று பதிவிட்டுள்ளார்..

வாழ்த்து பெற்றார்

வாழ்த்து பெற்றார்

அந்த போட்டோவில் அரசியவாதிகளுக்கேயுரிய வேட்டி சட்டைகள் மிஸ் ஆகி, அமைச்சரான பிடிஆரும், எம்எல்ஏவான டிஆர்பி ராஜாவும் பேன்ட் சட்டையில் ஸ்மார்ட்டாக காணப்படுகின்றனர்.. தனக்கு பதிலாக வேறு ஒருவர் நியமனம் செய்யப்பட்டால், அதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது என்பது அரசியல் கட்சிகளில் சாதாரணமாக நடக்கும் இயல்பாகும்.. ஆனால், இங்கு மேட்டரே வேற.. ஆயிரம்தான் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தாலும், சீனியர்களை மதித்து செல்வதில் ஜூனியர்களும், ஜூனியர்களை அரவணைத்து செல்வதில் சீனியர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த "இணைந்த கைகள்" போட்டோ..!

English summary
DMK IT Wing Secretary TRB Raja meets Finance Minister PTR Palanivel Thiyagarajan today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X