சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"புது ஆட்சி".. கையில் சாட்டையை எடுக்கும் ஸ்டாலின்.. பழைய மாதிரி இல்லை.. வேற மாதிரி இருக்குமாம்...!

திமுக தலைவர் ஸ்டாலின் ஜெ.பாணியிலான அரசியலை கையில் எடுப்பாரா?

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்து திமுகதான் ஆட்சி என்பதை உறுதியாக நம்பும் ஸ்டாலின், புதுபாணியிலான அதிரடியை கையில் எடுக்க போவதாக ஒரு தகவல் பறந்து கொண்டிருக்கிறது.

ரிசல்ட்டுக்காக தமிழகமே காத்துள்ளது.. இதில், அதிமுகவும், திமுகவும் பெருத்த நம்பிக்கையில் உள்ளன.. யார் ஜெயிக்க போகிறார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், இரு தரப்புமே தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை.

அதனால்தான் இரண்டு கட்சிகளுமே ஆளுக்கு ஒரு பக்கம், அமைச்சர்கள் லிஸ்ட்டை தயார் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.. அதிலும் திமுக சற்று கூடுதல் தெம்புடனேயே வலம் வருகிறது. அமைச்சர்கள் லிஸ்ட், அதிகாரிகள் லிஸ்ட், புதிய சபாநாயகர், கனிமொழிக்கு புது பதவி என அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி வருகிறது.

கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..! கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..!

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்நிலையில், திமுக தரப்பின் ஒரு செய்தி கூடுதலாக வட்டமடித்து வருகிறது.. அதன்படி, கொடைக்கானலில் இருந்து ஸ்டாலின் சென்னைக்கு ரிட்டர்ன் ஆன நிலையில், பல்வேறு நிர்வாகிகள் அவரை சென்று சந்தித்தார்கள்.. குறிப்பாக திமுக வேட்பாளர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.. அப்போது ஏகப்பட்ட புலம்பல்களை லிஸ்ட் போட்டு தெரிவித்தார்களாம்.

புலம்பல்

புலம்பல்

யாரும் தொகுதிக்குள் சரியாக வேலை செய்யவில்லை.. மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.. பல்வேறு முக்கிய தொகுதிகளில் தேர்தல் பணியிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.. என்று புலம்பினார்கள். இதையடுத்து, ஸ்டாலினுக்கு நெருக்கமான நிர்வாகிகள், சில ஆலோசனைகளை ஸ்டாலினிடம் அப்போது சொன்னார்களாம்.

 ஆட்சி

ஆட்சி

"நாம்தான் அடுத்து புது ஆட்சி அமைக்க போகிறோம்.. தொகுதிக்குள் இதுபோன்ற பிரச்சனைகள் கிளம்பாமல் இருக்க வேண்டும் என்றால், சர்வாதிகாரத்தை உங்கள் கையில் வைத்து கொள்ளுங்கள்.. எப்படி ஜெயலலிதா கடிவாளத்தை கடைசிவரை வைத்திருந்தாரோ, அதுபோலவே நீங்களும் இனி சற்று கடுமையை காட்ட வேண்டும், அதேபோல, குடும்பத்தினர் யாரையும் நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க வேண்டாம்.. இது பல குழப்பத்தை உருவாக்கவிடும்..

 டிப்ஸ்

டிப்ஸ்

மேலும் உங்களுக்கு தனி ஆலோசகர்களை வைத்து கொள்ளுங்கள், என்பது போன்ற சில விஷயங்களை சொன்னார்களாம்.. இதையெல்லாம் கவனமுடன் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம்.. அநேகமாக ஜெ.பாணி அரசியலையே ஸ்டாலினும் செய்வார் என்று தெரிகிறது.. முன்பெல்லாம் திமுக அமைச்சர்கள் என்றால், அந்த ஆட்சி முடியும்வரை இவர்கள்தான் இருப்பார்கள்..

 ஜெ.பாணி

ஜெ.பாணி

5 வருடத்தில் இவர்களை கருணாநிதி மாற்றவே மாட்டார்.. புகார்கள் வந்தாலும் கூப்பிட்டு கண்டித்து எச்சரிப்பாரே தவிர, ஜெயலலிதா போல ஓவர்நைட்டில் பதவியை பிடுங்க மாட்டார். ஜெ. ஆட்சியில் எந்த அமைச்சர்களாலும் நிம்மதியாக தூங்க முடியாது.. பொழுதுவிடிந்தால், புகார் வந்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கும்.. அதுபோலவே, ஸ்டாலினும் சாட்டையை கையில் வைத்திருக்கக்கூடும் என்கிறார்கள்... பார்ப்போம்..!

English summary
DMK Leader MK Stalins New Style of Politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X