சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே!

22 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடும் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்-வீடியோ

    சென்னை: போகிற போக்கை பார்த்தால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போக, மீதமிருக்கும் 22 தொகுதிகளில்தான் திமுக போட்டியிடும் போல இருக்கு.

    கூட்டணி இழுபறி என்பது அதிமுக, திமுக என இரு தரப்பிலுமே 2 மாதத்திற்கு மேலாக நிலவி வருகிறதே தவிர, தனியா நின்னு தேர்தலை சந்திக்க தயார் என்று அதிமுகவும் சொல்லவில்லை, திமுகவாலும் சொல்ல முடியவில்லை. 50 வருட திராவிட கட்சிகளே இன்னைக்கு கூட்டணிகளை அழைத்து பேசி வருவதுடன், அவர்களை திண்டாட வைத்தும் வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

    கருணாநிதியும், ஜெயலலிதாவும் எத்தனையோ சிக்கல்களை சமாளித்து கட்சியை இவ்வளவு தூரம் வளர்த்து கொண்டுவந்து, தொண்டர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு போனார்கள். ஆனால் தனித்து போட்டியிட முடியாத அளவுக்கு 50 வருட கட்சிகள் இருப்பதும், இப்போது கட்சி ஆரம்பித்த கமலும், டிடிவி தினகரனும் தனியாக தேர்தலை சந்திக்க களம் இறங்குவதும் அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது.

    திமுகவுக்கு சளைக்காத அதிமுக.. வாரிசுகளுக்கு அதிக சீட்.. நீண்ட கால உழைப்பாளிகள் நிலை அந்தோ பரிதாபம்!திமுகவுக்கு சளைக்காத அதிமுக.. வாரிசுகளுக்கு அதிக சீட்.. நீண்ட கால உழைப்பாளிகள் நிலை அந்தோ பரிதாபம்!

    தேமுதிக

    தேமுதிக

    போதுமான ஆளுமை திமுக, அதிமுகவில் இல்லையா? அல்லது கூட்டணிகளை நம்பித்தான் கட்சி நடத்தக்கூடிய நிலைமையும் நிர்ப்பந்தமும் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளதா? என தெரியவில்லை. இதற்கு உதாரணம் தேமுதிக இழுபறிதான். களம் இறங்குவதே கூட்டணிகளை நம்பித்தான், அதிலும் இப்படி நாள்கணக்கில் இழுபறி என்றால் மக்கள் நாளை என்ன நினைப்பார்கள், இந்த கட்சிகளின் மேல் எந்த மாதிரியான மரியாதை அவர்களுக்கு வரும்? என்றெல்லாம் யோசிக்க யாருமே தயாராக இல்லை.

    திணறல் ஏன்?

    திணறல் ஏன்?

    குறிப்பாக திமுகவில் பல நாள்கழித்து இன்றைக்குதான் விசிகவுக்கு தொகுதி பங்கீடு முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் திருமாவளவன் கூட்டணிக்குள்ளேயே இருப்பவர்தான். ஆரம்பத்தில் இருந்தே கேட்டது 2 தொகுதிகள்தான். இருந்தாலும் சிக்கலை சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் திணறியதாகவே தெரிகிறது.

    டிஆர் பாலு

    டிஆர் பாலு

    மாற்று கட்சியோ அல்லது எதிரான கட்சியையோ உள்ளுக்குள் சேர்ப்பதானால் ஸ்டாலின் தயங்கலாம், யோசிக்கலாம்.. ஆனால் கூடவே இருந்த விசிகவுக்கே இந்த இழுபறியா என்பதை பார்த்து திமுக தொண்டர்கள் குமுற ஆரம்பித்து விட்டார்கள். ஏன் ஸ்டாலின் இத்தனை தயக்கம் காட்டுகிறார், அவரால் தனித்து செயல்பட முடியவில்லையா? துரைமுருகன், டி.ஆர்.பாலுவின் பிடியில் சிக்கி உள்ளாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

    தலா ஒன்று

    தலா ஒன்று

    நன்றாக யோசித்துதான் 10 சீட் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதா? அல்லது கூட்டணி கட்சிகளுக்குள் இவ்வளவு சிக்கல்கள் வரும் என்று தெரியாமல் 10 என எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிட்டதா என தெரியவில்லை. 10 சீட் காங்கிரஸ் என்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 1 மற்றும் விசிக 2 என முடிவாகி விட்டது.

    நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    மீதம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி போன்றவைதான். இதில் மதிமுகவுக்கு 2 ஒதுக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டாலினுக்கு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால்,

    காங்கிரஸ் 10
    விசிக 2
    மதிமுக 2
    ஐஜேகே 1
    கம்யூனிஸ்ட்கள் 2
    மனித நேய மக்கள் கட்சி 1

    புலம்பும் திமுகவினர்

    புலம்பும் திமுகவினர்

    என்று குத்துமதிப்பாக கணக்கு போட்டாலும் திமுக 22 இடங்களில்தான் நிற்கும் என தெரிகிறது. இது திமுகவுக்கு பெரிய சறுக்கல்தான். ஏன் இந்த நிலைமை திமுகவுக்கு? ஸ்டாலினுக்கு என்ன ஆனது என்றெல்லாம் திமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

    English summary
    The DMK will contest only in 22 seats remaining in the alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X