சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பேரறிவாளன் விடுதலைக்கு.. முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்!" பளிச் என விளக்கும் அமைச்சர் க.பொன்முடி

Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்

தன்னை விடுதலை செய்யக்கோரித் தொடர்ந்து வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்


உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இது போன்ற தீர்ப்பு அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னர், பேரறிவாளன் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். முதலில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், வைகோ, சீமான் ஆகியோரை சந்தித்து வருகிறார்.

 சாதனை விளக்கக் கூட்டம்

சாதனை விளக்கக் கூட்டம்

இதற்கிடையே அமைச்சர் பொன்முடி பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் கீழ வீதியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டனர்.

Recommended Video

    CM Stalin-ஐ சந்தித்த Perarivalan.. என்ன பேசினார்கள்? #Politics | Oneindia Tamil
     நெல் கொள்முதல்

    நெல் கொள்முதல்

    பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, "திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு என்று எதுவும் செய்யவில்லை என்றும் குறிப்பாக நெல் கொள்முதலில் எதுவும் செய்யவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி வருகிறார். சட்டசபையிலேயே தெரியாத மணியன் இங்கே வந்து பேசிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், நெல் கொள்முதல் விவகாரத்தில் தற்போதுள்ள அரசு அளவுக்கு யாருமே செய்யவில்லை.

     கருணாநிதி காலத்து திமுக

    கருணாநிதி காலத்து திமுக

    தமிழ்நாட்டில் முன்பு எவ்வளவு நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தன. இப்போது அவை எந்தளவு அதிகரித்துள்ளது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். இது மட்டுமன்றி திமுக எதோ பாஜகவிடம் மடிப்பிச்சை கேட்கிறது என்பது போல ஓ.எஸ். மணியின் கூறுகிறார். கருணாநிதி காலத்தில் இருந்தே அனைவரையும் எதிர்த்து வளர்ந்த கட்சி தான் திமுக.

     முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்

    முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்

    தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்குக் காரணமாக இருந்தவரே நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் ஆனால், அதிமுகவினர் எதோ தாங்கள் தான் காரணம் என்பது போலப் பெருமை கொள்கிறார்கள். அவர்கள் 4 ஆண்டுகளாகத் தீர்மானம் போட்டுவிட்டு சும்மா தான் இருந்தார்கள்.

     தேர்தல் வாக்குறுதி

    தேர்தல் வாக்குறுதி

    ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடி பேரறிவாளனை விடுதலை செய்யக் காரணமானவர் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்குச் சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கத் தான் செய்கிறார்கள். இருப்பினும், தேர்தல் வாக்குறுதியில் ஒரே ஆண்டில் மு.க ஸ்டாலின் நிறைவேற்றிக் காண்பித்துள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    DMK minister Ponmudi explains the steps taken by DMK govt in Perarivalan case: (பேரறிவாளன் வழக்கு தொடர்பாக விளக்கும் திமுக அமைச்சர் பொன்முடி) Ponmudi explains welfare for farmers in DMK govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X