சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புறக்கணிப்பு.. செம கோபம்.. திமுகவில் விழுந்தது முதல் "விக்கெட்".. பாஜகவிற்கு தாவிய "டாக்டர்" எம்எல்ஏ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவில் வாய்ப்பு வழங்கப்படாததால் சில மூத்த உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. இந்த நிலையில் திமுகவில் இருந்து எம்எல்ஏ டாக்டர் சரவணன் விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

Recommended Video

    பாஜகவில் இணைந்த மற்றொரு திமுக எம்எல்ஏ… சீட் தராததால் அப்செட்!

    திமுகவிற்கான வேட்பாளர் அறிவிப்பு நேற்று முதல்நாள் வெளியானது. 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

    திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் புதிய உறுப்பினர்கள் யாருக்கும் திமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக தரப்பில் இதனால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்! கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்!

    வேட்பாளர்கள் தேர்வு

    வேட்பாளர்கள் தேர்வு

    சில தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு சரியாக நடக்கவில்லை. முக்கியமான உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தூக்கி கொடுத்துவிட்டனர். இதனால் உள்ளூர் திமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர் , பலர் எப்படி எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்ற திட்டத்தில் உள்ளனர் என்று திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விலகல்

    விலகல்

    இந்த நிலையில் திமுகவின் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.. கடந்த 2019 சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பாகசரவணன் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக இவர்தான் வெற்றிபெற்றார். ஆனாலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    ஏன்

    ஏன்

    அந்த இடைத்தேர்தலில் இவர் வெறும் 2000+ வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். இங்கு திமுகவை விட கம்யூனிஸ்ட் வலிமையாக உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்தத் தொகுதியின் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் அதிருப்தியடைந்துள்ளார்.

    சரவணன்

    சரவணன்

    இதனால் இன்று இவர் பாஜகவில் இணைந்துள்ளார். திமுகவில் வாய்ப்பு கிடைக்காத அதிர்ச்சியில் இவர் பாஜகவில் சேர்ந்துள்ளார். இவர் இதற்கு முன் மதிமுகவில் இருந்தார் . அதன்பின் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு சென்று உள்ளார்.

    வேட்பாளர்

    வேட்பாளர்

    பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவர் பாஜகவில் இணைந்து உள்ளார் . பாஜகவில் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரு தொகுதி இவருக்கு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று தகவல்கள் வருகின்றன.

    English summary
    DMK MLA Dr. P. Saravanan may join BJP today as he hasn't got any chance in Thiruparankundram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X