சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடியல்கார அண்ணாச்சி என அதிமுக போராட்டம் - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மீது முரசொலி கடும் பாய்ச்சல்!

Google Oneindia Tamil News

சென்னை: 10 ஆண்டுகளாக்க ஆட்சியில் இருந்த அதிமுக அறிவித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நயவஞ்சக நாடகம் என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி.

முரசொலியில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

பத்தாண்டுகளாக ஆட்சியைக் கையில் வைத்திருந்து 80 நாட்களுக்குமுன்புவரை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. என்ற கட்சி இரண்டு நாட்களுக்குமுன்னால் ஒரு அசிங்க ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லையாம்!

ஆட்சிக்கு வந்து இன்னும் 100 நாட்களே ஆகவில்லை. அதற்குள் நம்பர் 1 ஒ.பன்னீர் செல்வமும், நம்பர் 2 ஒ. பழனிசாமியும் சேர்ந்து பதாகைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.

'அறுக்கமாட்டாதவனுக்கு இடுப்பில் 52 கத்தி எதற்கு?' என்பார்கள் கிராமத்தில். அதைப்போல, பத்தாண்டு காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத இரண்டு பேர்,100 நாட்கள்கூட ஆகாத ஆட்சியைப் பார்த்து கேள்வி கேட்பது கேவலமாக இருக்கிறது!

DMK Mouthpiece Murasoli slams AIADMK for Protest against TN Govt

2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வென்ற கட்சி அ.தி.மு.க.! இந்த இரண்டு தேர்தல்களிலும் கொடுத்த வாக்குறுதிகளை பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றினார்களா என்றால் இல்லை!

2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது எதுவும் செய்யப்படவில்லை!

  • இலவச செல்போன் தரப்படவில்லை.
  • ஆவின் பால் பாக்கெட் 25 ரூபாய்க்கு தரப்படும் என்றார்கள். தரவில்லை.
  • ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்றார்கள்.தரவில்லை.
  • குறைந்த விலையில் அவசியமான மளிகைப் பொருள்கள் தரப்படும்என்றார்கள். தரவில்லை.
  • வீடில்லா ஏழை மக்களுக்கு 3 சென்ட் இடம் தரப்படும் என்றார்கள். தரவில்லை.
  • அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை தரப்படும் என்றார்கள். தரவில்லை.
  • கல்விக் கடன்கள் அனைத்தும் அடைக்கப்படும் என்றார்கள்.அடைபடவில்லை.
  • கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்றார்கள்.தரப்படவில்லை.
  • பண்ணை மகளிர் குழுக்கள் அமைக்கப்படும் என்றார்கள்.அமைக்கப்படவில்லை.
  • அனைத்து பழங்களுக்குமான சிறப்பு வணிக வளாகங்களை உருவாக்குவோம்என்றார்கள். உருவாக்கவில்லை.
  • அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி கொடுக்கப்படும் என்றார்கள்.கொடுக்கவில்லை.
  • டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் அமைக்கப்படும் என்றார்கள்.அமைக்கப்படவில்லை.
  • பட்டு ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்றார்கள். உருவாக்கவில்லை.
  • சென்னையில் மோனோ ரயில் விடுவோம் என்றார்கள். மோனோ ரயிலையே காணோம்.
  • கோவையில் மோனோ ரயில் ஓடும் என்றார்கள். காணோம்.
  • திருச்சியில் மோனோ ரயிலை விடுவோம் என்றார்கள். காணோம்.
DMK Mouthpiece Murasoli slams AIADMK for Protest against TN Govt

இதுதான் இரண்டு ஒ.க்கள் ஆண்ட லட்சணம்! அதற்கும் முன்னால் 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையாவது நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுவும் இல்லை!

  • இரண்டாவது விவசாயப் புரட்சித் திட்டம் கொண்டுவருவோம் என்றார்கள்.எந்தப் புரட்சியும் நடக்கவில்லை!
  • விவசாயிகளின் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவோம் என்று சொன்னார்கள்.
  • இருந்தவருமானமும் போனது தான் மிச்சம்!
  • எல்லா விவசாயக் கருவிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்போம் என்றார்கள். தரவே இல்லை!
  • கரும்பு விலையைப் போல மற்ற விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றார்களே தவிர நிர்ணயிக்கவில்லை!
  • கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பணத்துக்குப் பாக்கி வைக்கமாட்டோம் என்று சொன்னீர்களே? அதன் படி நடந்தீர்களா...? இல்லை!
  • சொட்டு நீர்ப் பாசனத்தை அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகச் செய்து கொடுப்போம் என்றீர்களே?... செய்து கொடுத்துவிட்டீர்களா?

அண்ணே! சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்? டெல்லி விசிட்டின் பின்னணிஅண்ணே! சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்? டெல்லி விசிட்டின் பின்னணி

- இப்படி எதுவுமே நடக்கவில்லை.

எந்த முகத்தை வைத்துக் கொண்டுபோராட்டம் நடத்துகிறீர்கள்?

பன்னீர்செல்வமும், பழனிசாமியும் காவிரியைப் பற்றியும் மேகதாதுவைப் பற்றியும் முழக்கமிடுகிறார்கள். இந்த முழக்கத்தை டெல்லியில் அல்லவா போய் போடவேண்டும்?

2007 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் காலத்தில் போடப்பட்ட வழக்கையே விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத அரசு அ.தி.மு.க. அரசு. 2011 இல் இருந்து வாய்மூடிக் கிடந்ததால்தான் இறுதி விசாரணையே 2017 ஆம் ஆண்டுதான்நடந்தது.

உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது தமிழக அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. தமிழக அரசின் மனுவில் என்ன சொல்லப்பட்டு இருந்ததோ, அதைக் கூட நீதிமன்றத்தில் சொல்லிவாதங்களை வைக்கவில்லை.

தமிழக அரசின் வழக்கறிஞர் பேசுவதும், மனுவில் உள்ளதும் வேறு வேறாக இருக்கிறதே என்று நீதிபதிகளே சொன்னார்கள். இப்படி அலட்சியமாக வழக்கை நடத்திய அரசுதான் அ.தி.மு.க. அரசு. வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டுவந்தது. அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசுசெய்யவில்லை. பா.ஜ.க.வை செய்ய வைக்க பழனிசாமியால் முடியவும் இல்லை.

ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. அதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையோடு இதனைச் சேர்த்துவிட்டார்கள். அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. இதைவிட பழனிசாமியின் பச்சைத் துரோகம் என்ன இருக்க முடியும்?

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் வரத்துகுறைந்துவிடும். ஆனால் கட்டுவதில் உறுதியாக இருந்தது கர்நாடகம். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்திக்கிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகக் கட்சிகளை அழைத்துச் சென்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை.

முதுகெலும்பு இல்லாமல் பா.ஜ.க. அரசுக்குத் தலையாட்டிக் கொண்டு இருந்தார் பழனிசாமி. இப்படிப்பட்ட துரோக சாமிதான் இன்று பதாகை பிடித்துக் கொண்டுநிற்கிறார்.

'நீட்' தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேட்கிறார் பழனிசாமி. 'நீட்'தேர்வை நடத்துவது தமிழ்நாடு அரசல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசு. அவர்கள்தான் ரத்துசெய்ய வேண்டும். அதற்கான அடிப்படை வேலைகளை கழக அரசு செய்துவருகிறது. உடனடியாக ரத்து செய்ய வேண்டுமானால் மோடியின் வீட்டு வாசலுக்குத்தான் பழனிசாமி போக வேண்டும். இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

English summary
DMK Mouthpiece Murasoli has slammed AIADMK leader Edappadi Palaniswami and O Panneerselvam for the Protest against Tamilnadu Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X