திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தபோதும், ஆளுநர் தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்பது ஏன் தெரியுமா?
ஆளுநர் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. எனினும், இந்த விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஆளும் கட்சியான திமுக ஆளுநர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஆளுநர் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்று திமுக செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதா உள்பட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்று ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் அளித்த ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை வாசிக்கவில்லை. தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேசுவதை ஆளுநர் தவிர்த்தார்.

ஆளுநரின் தேநீர் விருந்து
ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில், குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் அறிக்கை
அதேபோல், காங்கிரஸ் கட்சியும் பங்கேற்காது என்று அந்தக் கட்சியின் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக கூறி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக..
அதேபோல், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. அரசியல் அமைப்பு சட்ட கடமைகளை நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

திமுக இரட்டை நிலைப்பாடு?
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் ஆளும் கட்சியான திமுக பங்கேற்கிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில், ஆளுநர் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில், குடியரசு தினத்திற்கு அழைப்பு முறையாக விடுத்து இருக்கிறார்.

ஆளும் கட்சிக்கு என ஒரு பொறுப்பு உள்ளது
தமிழ்நாடு அரசு என்றும் தமிழக அரசின் முத்திரையும் வைத்து அனுப்பியிருக்கிறார். கடந்த முறை செய்யத்தவறியதை இந்த முறை ஆளுநர் செய்து இருக்கிறார். தமிழ்நாடு தமிழகம் பெயர் மாற்றம்கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்ட்டதாக அவர் சொன்னாலும், அதை திரும்ப பெற்றுக்கொண்டதாக பொருளாகும். குடியரசு தின விழாவை புறக்கணிப்பது சரியானதாக இருக்காது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதனால் ஆளும் கட்சிக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அந்த வகையிலே கலந்து கொள்கிறோம்" என்றார்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications