தேச பக்தி கடிகாரமா.. ரபேல் விமானத்தை இந்தியா மட்டுமா வாங்கியிருக்கு அண்ணாமலை? ராஜிவ் காந்தி கேள்வி
சென்னை : ரபேல் போர் விமானத்தையும் அந்த 500 வாட்ச்சையும் இந்தியா மட்டுமே வாங்க முடியும் என்று அண்ணாமலை கதை சொல்கிறார். எகிப்து, கத்தார், கிரீஸ் போன்ற நாடுகளும் ரபேல் விமானங்களை வாங்கியுள்ளன என்று திமுக ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆடுகளத்தில் உலக கோப்பை மேட்ச் பிரச்சினையே முடிந்து விட்டாலும், அரசியல் களத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாட்ச் பிரச்சினை முடியாது போல இருக்கிறது. 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என திமுகவினர் கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர்.
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அவர் கையில் கட்டியுள்ள ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலை
அதற்கு பதிலளித்த அவர், "இப்போது புதிதாக நாம் அணியும் சட்டை வேட்டி நடந்து செல்வது கார் இவற்றையெல்லாம் ஒப்பிடுவதைத்தான் இப்போது புதிதாக ஆரம்பித்துள்ளனர். நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன்.

ரஃபேல் விமானம்
ரபேஃல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சில் அந்த பாகங்கள் எல்லாம் இருக்கிறது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கல, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். அந்த 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149வது வாட்ச் என்னுடையது என கூறியிருந்தார்.

5 லட்சம்
இந்நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அவரது பேட்டிக்குப் பின் இந்த விவகாரம் மேலும் பெரிதானது. திமுக மாணவரணியைச் சேர்ந்த ராஜீவ் காந்தியும் இந்த விவகாரத்தில் அண்ணாமலையை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராஜீவ் காந்தி
ரபேல் போர் விமானத்தையும் அந்த 500 வாட்ச்சையும் இந்தியா மட்டுமே வாங்க முடியும் என்று அண்ணாமலை கதை சொல்கிறார். எகிப்து, கத்தார், கிரீஸ் போன்ற நாடுகளும் ரபேல் விமானங்களை வாங்கியுள்ளன என்று திமுக ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அண்ணாமலை பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார் திமுக ராஜீவ் காந்தி. அதில் அண்ணாமலை அன்றும் இன்றும் பேசிய பேச்சுகளோடு,"ரபேல் போர் விமானத்தையும் அந்த 500 வாட்ச்சையும் இந்தியா மட்டுமே வாங்க முடியும் என்று அண்ணாமலை கதை சொல்கிறார்.எகிப்து,கத்தார்,கிரீஸ் போன்ற நாடுகளும் ரபேல் விமானங்களை வாங்கியுள்ளன!பங்களாதேஷ் ,கொலம்பியா,ஈராக் , மலேசியா,சவூதி அரபியா போன்ற நாடுகள் பயன்படுத்த உள்ளன. How many lies Annamalai? ( எத்தனை பொய் அண்ணாமலை) " என பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்











Click it and Unblock the Notifications