எம்ஜிஆர் கால அமைச்சரை ஓரங்கட்டிட்டீங்களே.. பரிந்து பேசிய அதிமுக நிர்வாகி.. திரண்டு வந்த திமுகவினர்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் சீனியர்களை பின்னுக்குத் தள்ளி 10வது இடம் பிடித்ததை விமர்சித்திருந்தார் அதிமுக ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன். அவருக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அமைச்சராக இருந்த முத்துசாமி, 12வது இடத்தில் உள்ள நிலையில், முதல் முறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது எதன் அடிப்படையில் எனக் கேள்வி எழுப்பி இருந்தார் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளருமான ராஜ் சத்யன்.
சீனியர்களை ஓரங்கட்டி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி? என்றும் அதிமுகவில் பணியாற்றும் பலர் இருக்க, ராஜன் செல்லப்பாவின் வாரிசான உங்களுக்கு ஐடி விங் பதவி கிடைத்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சரவை சீனியாரிட்டி
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ள நிலையில் அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மூத்த அமைச்சர்களை பின்னுக்குத் தள்ளி, உதயநிதி ஸ்டாலின் 10வது இடம் பிடித்துள்ளார். அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்திலும், சீனியாரிட்டி அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போதும் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. சட்டசபையில் முதல் வரிசையில் 15 பேர் வரை அமரலாம் என்ற நிலையில், அமைச்சரவை சீனியாரிட்டியில் 10வது இடம் வகிக்கிறார் உதயநிதி.

அமைச்சர் உதயநிதி
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 19 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் 35வது நபராக இணைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது முன் வரிசையில் உதயநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

முன்வரிசை
திமுகவில் முந்தைய ஆட்சிகாலத்திலேயே அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் பின் வரிசையில் இருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முன் வரிசை ஒதுக்கப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனினும், அமைச்சரவை தர வரிசை சீனியாரிட்டி (Inter-se-seniority) அடிப்படையிலேயே இந்த குழு புகைப்படம் எடுக்கப்படுவதும், சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10வது இடம்
சீனியாரிட்டி அடிப்படையிலான அமைச்சரவையின் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடங்களில் அமைச்சர் துரைருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 11 மற்றும் 12வது இடங்களில் அமைச்சர்கள் ரகுபதி, முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் அமைச்சரவையில்
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சு.முத்துசாமி தற்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கிறார். அவருக்கு உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறகு 12வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டு முறைக்கும் மேல் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் பின் வரிசையைப் பிடித்துள்ளனர். இது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதன் அடிப்படையில்
இதுதொடர்பாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன், "பலமுறை அமைச்சர்களாக இருந்தவர்கள், 1985 முதல் அமைச்சராக இருக்கும் முத்துச்சாமி, நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி அமைச்சரவை சீனீயாரிட்டி பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது எதன் அடிப்படையில்?" எனக் கேள்வி எழுப்பினார்.

சீனியரை ஓரங்கட்டினீர்களே
பல சீனியர்கள் அமைச்சர்களாக இருந்த போது முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓபிஎஸ்ஸை முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்து, போர்ட்ஃபோலியோவில் முதல் இடம் கொடுத்தது ஏன்? இதே முத்துச்சாமியை ஜெயலலிதா ஓரங்கட்டியபோது உங்களுக்கு கோபம் வந்திருந்தால், செங்கோட்டையன் இருக்கும்போது பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கொடுத்தபோது கேட்டிருந்தால் நீங்கள் யோக்கியர்கள் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

வாரிசு
அதிமுகவில் சிறப்பாகப் பணியாற்றும் பலர் இருக்க, ராஜன் செல்லப்பாவின் வாரிசான உங்களுக்கு ஐ.டி விங் பதவி கிடைத்தது எப்படி, எந்த அடிப்படையில், மற்ற தொண்டர்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தீர்கள்? வாரிசாக அரசியலில் நிலைபெற்றுவிட்டு, இன்னொரு கட்சியை மட்டும் விமர்சிப்பது நியாயமா? என்றும் நெட்டிசன்கள் ராஜ் சத்யனுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications