திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு 1 சீட்.. முருகவேல் ராஜன் பேட்டி!
சென்னை: திமுக கூட்டணியில் எங்களுக்கு 1 இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர் என திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த பிறகு மக்கள் விடுதலை கட்சித் தலைவர் முருகவேல் ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர் முருகவேல் ராஜன். பாமக நிறுவனர் ராமதாஸால் அரசியலுக்கு கொண்டுவரப் பட்டவர். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவரை வட மண்டலத்தில் உள்ள வந்தவாசி தொகுதியில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்கினார் ராமதாஸ். 2002ல் பாமகவில் இருந்து விலகிய முருகவேல்ராஜன் பின்னர் மக்கள் விடுதலை கட்சியைத் தொடங்கினார்.

திமுக கூட்டணியில் முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சியும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டசபை தொகுதி முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது வரை 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், இன்று மக்கள் விடுதலை கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் உள்ளிட்ட குழுவினர் இன்று அண்ணா அறிவாலயம் வந்து டிஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முருகவேல் ராஜன், “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி இன்று வரை திமுக கூட்டணியில் இருக்கிறோம். 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டோம். அதேபோல, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.
திமுக குழுவினர் எங்கள் கருத்துகளைக் கேட்டு, இடம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டையில் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அதே தொகுதியா அல்லது வேறு தொகுதியா என முதல்வருடன் ஆலோசித்து பரிசீலித்து உறுதிப்படுத்தி தெரிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications