3 பேரை தேர்வு செய்ய 300 பேர் மனுவா!.. "அவங்களுக்கு" ஸ்கெட்ச்.. ராஜ்ய சபாவிற்கு திமுக இறக்கும் பிளான்
சென்னை: ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடக்கும் வாய்ப்புள்ள நிலையில் திமுக சார்பாக எம்பி பதவியை பெற 300 முக்கியமான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களிலும், திமுக கூட்டணி 159 இடங்களிலும் வென்ற நிலையில், தற்போது ராஜ்ய சபாவில் திமுகவின் பலன் அதிகரிக்கிறது. திமுக சார்பாக ராஜ்ய சபாவிற்கு கூடுதல் எம்பிக்கள் செல்ல முடியும்.
ராஜ்ய சபாவில் தற்போது 3 தமிழ்நாடு எம்பிக்கள் இடம் காலியாக உள்ளது. அ.தி.மு.க. ராணிப்பேட்டை முகம்மது ஜான் ராஜ்யசபா மறைவால் ஒரு இடம் ஏற்கனவே காலியாக இருந்தது.

இரண்டு இடம்
இது போக இரண்டு அதிமுக ராஜ்ய சபா எம்பிக்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்கள். இதனால் இவர்களின் இடமும் காலியாக உள்ளது. இந்த மூன்று எம்பி பதவிகளையும் திமுகதான் இந்த முறை வெல்ல போகிறது.

யாருக்கு
இந்த நிலையில் 3 ராஜ்ய சபா எம்பி பதவிக்கு 300 பேர் வரை திமுகவில் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பல மூத்த உறுப்பினர்கள், சட்டசபை தேர்தலில் நின்று தோல்வி அடைந்த சில முக்கிய புள்ளிகள், வாய்ப்பு கிடைக்காத சில இளம் புள்ளிகள் இந்த பதவிக்கு ஆசைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறி
ஆனால் திமுக தரப்போ கொங்கு மாவட்டத்தில் ஒருவர், சிறுபான்மையினர் ஒருவர், பெண் ஒருவருக்கு எம்பி பதவியை கொடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பெரும்பாலும் ஒரு எம்பி பதவி கண்டிப்பாக சென்றுவிடும் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன. இவரின் தேர்தல் தோல்வியை திமுகவே எதிர்பார்க்காத நிலையில், எம்பி பதவி கொடுக்கும் திட்டத்தில் திமுக இருப்பதாக தெரிகிறது.

ஆஸ்டின்
இது போக கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு நம்பிக்கை அளித்த, அதிமுகவின் எஸ்பி வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சிவசேனாதி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகிய சிலரும் கூட இதே ரேஸில் இருப்பதாக தெரிகிறது. இதெல்லாம் போக குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள சில திமுக தலைகளும் எம்பி பதவியை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

300 பேர் லிஸ்ட்
திமுக அலுவலகத்திற்கு வந்துள்ள 300 பேர் லிஸ்டில் திமுக ஏற்கனவே 2 பேரை டிக் அடித்துவிட்டதாக (சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட) தெரிகிறது. இன்னும் ஒருவரை இறுதி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால் இது இறுதிப்பட்டியல் இல்லை, கடைசி நேரத்தில் மொத்தமாக லிஸ்ட் மாற்றப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்!












Click it and Unblock the Notifications