சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த தப்பு நடக்கக்கூடாது.. உதயநிதியின் புதிய அணுகுமுறை.. உற்சாகத்தில் திமுக நிர்வாகிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், புது முயற்சியாக, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள், திமுகவிற்காக கடுமையாக உழைத்து பதவியில் இல்லாமல் உள்ள பலரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் உள்ள திமுக இந்த முறை எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறது.

ஸ்டாலின் முயற்சி

ஸ்டாலின் முயற்சி

இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் முக ஸ்டாலின், அதிமுகவிற்கு அதிக வாக்கு வங்கி உள்ளள கிராமங்களை குறிவைத்து கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் கலைந்துரையாடி வருகிறார். ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியில் அதிருப்தி இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு

ஒவ்வொரு ஊராக தேர்தல் பிரச்சாரம் நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், அந்த ஊர்களில உள்ள திமுகவின் ஆரம்பகால தொண்டர்கள், நிர்வாகிகளை சந்ததித்து நலம் விசாரித்து, அன்பு பாராட்டி வருகிறார். அவர்களின் செயல்பாடுகளை அங்கு பேசி, கட்சியினரை உற்சாகப்படுத்துகிறார். கட்சியில் தற்போது பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஒரு காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்த பலரையும் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த அணுகுமுறையை திமுக நிர்வாகிகளே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.

உற்சாகப்படுத்தும் உதயநிதி

உற்சாகப்படுத்தும் உதயநிதி

இந்த முறை கோஷ்டி பூசல் எதுவும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் உதயநிதி ஸ்டாலின், அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். சண்டைகளை மறந்து சமரசமாக செல்லுமாறு கூறி வருகிறார்.

புதிய மாற்றம்

புதிய மாற்றம்

கடந்த முறை தேர்தலில் திமுக தோற்றதற்கு கட்சியில் சில இடங்களில் நிலவிய கோஷ்டி மோதல்களும் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே சீட் பிரச்சனையால் இந்த முறை அதே தவற நடக்கக்கூடாது என்று உதயநிதி விரும்புகிறாராம். எனவே தேர்தல் வியூகங்களிலும், நிர்வாகிகளை அணுகும் முறையிலும் நிறைய மாற்றங்களை வரலாம் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

English summary
With the assembly elections looming, DMK Youth Secretary Udayanithi Stalin is making a fresh start by meeting and encouraging senior members of the party, volunteers and many others who have worked hard for the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X