சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பு பூரா முள்ளு.. கோடை காலத்தில் மட்டுமே தூங்கும்.. மருத்துவ குணத்திற்காக கொல்லப்படும் முள் எலி!

Google Oneindia Tamil News

சென்னை: உடம்பு பூரா முள் இருக்கு.. மூக்கு கூர்மையாக இருக்கிறது. பார்ப்பதற்கு எலி போல் இருக்கு.. ஆனால் அது எலி இல்லை.

பொதுவாக அரிய வகை உயிரினங்கள் என்றால் அதை போற்றி பாதுகாப்பதுதான் need of the hour னு சொல்வார்கள். அது போல் இன்று வெள்ளை புலி, ஒற்றை கொம்பு காண்டாமிருகம், சிட்டுக் குருவி உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.

இவற்றை வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அழிந்து கொண்டு வரும் இனங்களில் முள் எலியும் ஒன்று.

''ரியல் ஹீரோ ஓய்வெடுக்கிறது!'' - கண்ணி வெடிகளை மோப்ப சக்தியாலே கண்டுபிடித்து விருது பெற்ற எலி மரணம்''ரியல் ஹீரோ ஓய்வெடுக்கிறது!'' - கண்ணி வெடிகளை மோப்ப சக்தியாலே கண்டுபிடித்து விருது பெற்ற எலி மரணம்

முள் எலி

முள் எலி

இந்த முள் எலி என்பது உடம்பு முழுக்க முள் இருக்கும். மூக்கு கூர்மையாக இருக்கும். பார்ப்பதற்கு எலி போல் இருக்கும். ஆனால் இது எலி வகையறா கிடையாது. இதற்கு Madras Hedge Hog aka Bare bellied hedge hog என்ற பெயரும் உண்டு. இது பொதுவாக தென்னிந்தியாவில் வசித்து வரும் ஒரு பூச்சி உண்ணும் உயிரினம்.

தமிழகம்

தமிழகம்

இந்த உயிரினம் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் காணப்படுகிறது. இது குறைந்த அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்ட ஹெட்ஸ் ஹாக் வகையாகும். கோடை காலத்தில் மட்டும் தூங்கும். இது பூச்சிகளை மட்டுமே உணவாக கொள்ளும். சிலர் இதை எலி என தவறாக கருதுகிறார்கள்.

பந்து

பந்து

மனிதனாலோ அல்லது விலங்குகளோ ஆபத்து ஏற்பட போகிறது என்பதை அறிந்தால் போதும், இது பந்து மாதிரி சுற்றிக் கொள்ளும். இதனால் இது சாலைகளில் வாகனங்களில் மோதி எளிதாக உயிரிழக்கிறது. சிலர் இந்த முள் எலியை மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பி கொன்றுவிடுகிறார்கள்.

இருமல் எலி

இருமல் எலி

இதற்கு இருமல் எலி என்ற பெயரை வைத்தும் அழைக்கிறார்கள். இதன் மாமிசத்தை சாப்பிட்டால் நாள்பட்ட இருமல் குணமாகும் என நம்புகிறார்கள். மேலும் இது மருந்து தயாரிக்கவும் உதவுவதாக சொல்கிறார்கள். இதன் தோலை நெருப்பில் சுட்டு வேது பிடிக்கவும் உதவுகிறது. இந்த முள் எலி வகை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. பல முள் எலிகள் பாதுகாப்பற்ற முறையில் வசிக்கின்றன. இவற்றிற்கு பாதுகாப்பு அவசியம் என்கிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள். Tamilnadu Geography யால் எடுக்கப்பட்ட இந்த முள் எலியின் படம் சங்கரன்கோவிலில் எடுக்கப்பட்டதாம்.

English summary
Mul Eli (முள் எலி): Madras Hedge hog (Mul Eli ) found only in south India now going to endemic. தென்னிந்தியாவில் காணப்படும் அரிய வகை முள் எலியின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவ குணத்திற்காக சமூகவிரோதிகள் இதை கொல்கிறார்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X