கிளாம்பாக்கம் போகாத ஒரே ரூட் இது மட்டும்.. கோயம்பேட்டில் இருந்தே கிளம்பலாம்.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மாவட்ட அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் போகாத ஒரே ரூட் பேருந்து தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஒரு வாரமாக ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: ஏற்கெனவே விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 TNSTC பேருந்துகள் இயக்கப்படும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 TNSTC பேருந்துகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது போக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எல்லாம் பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் போகாத ஒரே ரூட்: கிளாம்பாக்கம் போகாத ஒரே ரூட் பேருந்து தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் மாவட்டங்களுக்கு ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் TNSTC பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் போன்ற ரூட்டுகளுக்கு செல்லும் பேருந்துகள் பொதுவாக ஈசிஆர், புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகள் எல்லாம் இந்த ரூட்டில்தான் செல்லும். இனிமேலும் கிளாம்பாக்கம் செல்லாமல் இந்த பேருந்துகள் எப்போதும் போல கிண்டி.. ராஜீவ் காந்தி சாலை .. ஈசிஆர் வழியாகவே செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய பேருந்து நிலையம்: ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும் என CMDA தெரிவித்துள்ளது.
அதுவும் அடுத்த மாதமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் கட்டுப்பாடு: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
விழிப்புணர்வு: இந்த பேருந்து நிலையம் குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் தமிழ்நாடு அரசு இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த பேருந்து நிலையத்திற்கு எப்படி எளிதாக செல்வது, அந்த பேருந்து நிலையத்திற்கு செய்யப்பட்டு உள்ள பேருந்து வசதிகள் , ரயில் வழியாக எப்படி செல்வது என்பது உள்ளிட்ட விஷயங்களை விழிப்புணர்வு பிரச்சாரம் போல செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முக்கிய காரணம்: தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியாரின் புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அரசு பேருந்துகள் உள்ளே வராது என்பதால் அதற்கான புக்கிங் வெகுவாக குறைந்ததை அடுத்து ஆம்னி பேருந்துகளை இனி உள்ளே வர விடக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உள்ளே வருவதற்கு ஆம்னி மட்டுமே ஒரே வழி என்பதால் மக்கள் பலரும் அதையே விரும்புகிறார்கள் என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம். இதை சரிகட்டவே புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.
இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் கடந்த 18ம் தேதி முதல் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் முடிந்த நிலையில் இனி பேருந்துகள் கோயம்பேடு வரை வராது.
அதாவது சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் இனி வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
பேருந்து நிலையம்: சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தெந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கான அளிக்கப்பட்ட விளக்கத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்.












Click it and Unblock the Notifications