ககன்தீப் சிங்கை நம்பிய முதல்வர்.. 2020 இல் எப்படியிருந்த வேளச்சேரி இப்ப எப்படியிருக்கு பாருங்க!
சென்னை: சென்னையில் நள்ளிரவில்லெல்லாம் மழை பெய்ததா என பொழுதுவிடிந்து கேட்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளதாக பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏன்டா வருதோ என இருக்கும், அதே வேளையில் வராட்டி கோடையில் தண்ணீர் பஞ்சம் வந்துவிடுமே என்றும் இருக்கும்.
காரணம் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகும். இன்னொன்று மழையால் தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு கூட தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு நிலையை வாரக்கணக்கில் முடக்கி போட்டு விடுகிறது.

தாழ்வான பகுதிகள்
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் அவர்களது வாழ்வாதாரமும் தண்ணீர் வடியும் வரை பாதிக்கும். இதனால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என சென்னைவாசிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கோரிக்கை
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் கோரிக்கை வைப்பதும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுவதும் வெள்ள நீர் வடிந்த பின்னர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்வதுமாக இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்குள்ளாக மழைநீர் வடிகால்களை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நிர்வாக இயந்திரத்தை மாற்றினார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். இவர் கடலூர் உள்ளிட்ட வெள்ளம் அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். ஒரு முறை கடலூரில் கனமழை பெய்து வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் நடந்தது.

மழை பெய்யாது
இதையடுத்து அங்கு இதற்கு மேல் மழை பெய்யாது என்பதை நம்பி அன்று இரவு சென்னைக்கு தனது வீட்டிற்கு வந்தார் ககன்தீப் சிங். ஆனால் கடலூரில் மீண்டும் மழை என்பதை அறிந்த ககன்தீப், வந்ததும் வராததுமாக மீண்டும் கடலூருக்கு புறப்பட்டு சென்றார். அத்தகைய நேர்மையான அதிகாரி. மக்கள் நலன்களில் எப்போது சமரசம் செய்து கொள்ள மாட்டார்.

சிங்கார சென்னை 2.o
அத்தகைய அதிகாரியிடம் முதல்வர் ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை 2.o திட்டத்தை ஒப்படைத்தார். அந்த வகையில் ககன் தீப் சிங்கின் முதல் பணியே குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் கால்வாய்களை தூர்வாரி, டிரோன் இயந்திரங்கள் மூலம் கொசுக்களின் லார்வைக்களை அழிக்கும் வேலைகளை செய்தார். அப்படியே படிப்படியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை
அரசின் துணையுடன் ககன்தீப் சிங் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் எடுத்த நடவடிக்கையால் இந்த ஆண்டு நேற்று முதல் மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

2020 இல் வேளச்சேரி
வேளச்சேரி பகுதிகளில் ஆண்டுதோறும் வெள்ளநீர் சூழும். இவை இயல்பு நிலை திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும். கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் சூழ்ந்த பிறகும் வேளச்சேரியில் வெள்ளம் வடிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு வேளச்சேரிவாசி ஒரு போட்டோவுடன் ட்வீட் போட்டிருந்தார்.

2022 இல் வேளச்சேரி
இந்த நிலையில் இந்த ஆண்டு அதே இடத்தில் வெள்ளம் வடிந்து காணப்படும் காட்சிகளையும் அதே நபர் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில் "என் வீடு இருக்குற தெரு ரொம்ப down. எப்போ மழை பெய்ஞ்சாலும் தண்ணி அப்படியே நிக்கும். மோட்டர் பம்ப் வச்சித்தான் தண்ணிய எடுப்பாங்க. இந்த தடவை நிலைமை அப்படி இல்ல. தண்ணீ பெருசா நிக்கல" என குறிப்பிட்டுள்ளார். நகரின் பெரும்பகுதிகளில் இந்த நிலைதான் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications