இப்போதும் சினிமாவில் ஜொலிக்கும் நயன்தாரா.. நடிக்க வரும் முன் எப்படி இருந்தார் தெரியுமா? இங்க பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்றும்.. அவரது ஆரம்பக்கட்ட வாழ்க்கை புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஓயாத சர்ச்சை..பரபரப்புக்கு மத்தியில் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா...
படம் ஒன்றிற்கு 10 கோடி வரைக்கு சம்பளம் வாங்கும் நயன்தாரா, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே
கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். வெறும் 5 ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உருவெடுத்த நயன்தரா.. தற்போது வரை அந்த இடத்தை அசைக்க விடாமல் வைத்து இருக்கிறார். நயன்தாரா கல்லூரியில் படிக்கும் போதே மாடலாக பணிசெய்தவர்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில்
அதை தொடர்ந்து கேரளாவின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். அந்த வீடியோக்கள் கூட இப்போதும் யூடியூப்களில் வலம் வருகின்றன. தமிழில் ஐயா படத்தில் சரத்குமாருடனும் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாகவும் நடித்து பெரும் புகழ் அடைந்தார். அதன்பிறகு காதல் சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் சினிமா கிராப் அவ்வளவுதான் என பலரும் ஆருடம் கூற.. அது அத்தனையும் தவிடு பொடியாக்கி மீண்டும் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.

நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல்
எப்போது தைரியமாக எதையும் செய்யக்கூடியவர் என நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. தில் லேடி என்று சொல்லக்கூடிய வகையில் எப்போதும் எந்த விஷயத்தையும் தைரியத்துடன் கையாளும் பழக்கம் கொண்டவராம். ஓடி ஒளிவது பழக்கமில்லை என்றும் எதையும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருக்கும் பழக்கம் கொண்டவராம்.

சினிமாவில் ஜொலிக்க காரணம்
கேரளாவை சேர்ந்த நயன்தாரா தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார். அனைத்து வித ஆடைகளும் நயன்தாராவுக்கு பொருத்தமாக இருப்பதால் எல்லாவித கேரக்டர்களுக்கும் அவர் பொருத்தமாக அமைந்துவிடுகிறது. இதுவும் அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். இதுவும் அவர் தற்போது வரை சினிமாவில் ஜொலிக்க முக்கிய காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இயக்குநர் விக்னேஷ் சிவனை மணந்து கொண்ட நயன் தாரா, வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆனார். இதுவும் சர்ச்சையாக உருவெடுத்து விதிமீறல் என்ற பிறகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது நயன் தாரா நடிப்பில் உருவாக்கியுள்ள கனெக்ட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

கனெக்ட் திரைப்படம்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் திகிலாகவும் பல திருப்பங்களையும் கொடுக்கும் படமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தளபதி விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் நயன்தாரா நடித்துள்ளார்.
-
3 மல்லு நடிகைகள் மந்திரிமார்களுக்கு செக்! திரையிலிருந்து தெருக்களுக்கு வந்த வீணா நாயர்! பின்னணி என்ன -
Parthiban: இனி ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன்.. சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்! -
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
"நயன்தாரா வேண்டும்" சி.வி.சண்முகத்தின் பேச்சு அருவருக்கத்தக்கது! கனிமொழி, ஜோதிமணி கண்டனம் -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
“தெலுங்கு தெரியாது.. ஆனால்..” சாதியை குறிப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்! -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி!












Click it and Unblock the Notifications