ஜோசியம், ஜாதகம் எல்லாம் பொய்யா கோபால்? அதிமுக வெற்றி குறித்து நடிகர் அனுமோகனின் பழைய வீடியோ டிரென்ட்
சென்னை: அதிமுக 33 இடங்களிலும் வெல்லும் என சொன்ன நடிகர் அனுமோகனின் பழைய வீடியோவை எடுத்து போட்டு ஜாதகம், ஜோசியம் எல்லாம் பொய்யா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

திமுக கூட்டணி சார்பில் திமுக 22 இடங்களிலும் (கொமதேக -1) காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது.
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிட்டது.
பாஜக கூட்டணி சார்பில் பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும், சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்திலும் அதிமுக 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டாவது அதிமுக சார்பில் ஒரே ஒரு எம்பி தேனி தொகுதியில் வென்றார். ஆனால் இந்த முறை அது கூட இல்லை. அதிமுக க்ளீன் வாஷ் அவுட் ஆகிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் அதிமுக 17 முதல் 33 இடங்கள் வரை வெல்லும் என தெரிவித்த நடிகர் அனுமோகனின் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அனுமோகன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக குறைந்தபட்சம் 17 இடங்களில் வெல்லும். இல்லாவிட்டால் 24 அதுவும் இல்லையெனில் 33 இடங்களில் வெல்லும். இதற்காக நான் திமுகவுக்கு எதிரி இல்லை.
நான் ஜோதிட ரீதியில் கணித்ததைத்தான் சொல்கிறேன். 17 சீட்டுகளுக்கு குறையவே குறையாது. 17 எண்ணிக்கை எப்படி என்றால் ஜோதிடம் , எண் கணிதத்தை சின்ங் செய்தால் 17 ஆம் தேதி கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாள். அந்த கட்சி தழைத்து வரும் வாழை இலை.
24 தொகுதிகளில் வெல்லும் என நான் ஏன் சொன்னேன் என்றால் ஜெயலலிதாவின் பிறந்தநாள். சுக்கிரன் சூப்பராக இருந்தால் குரு + குரு = சுக்கிரன். சுக்கிரன் எகிறி தூக்கி கொடுப்பார், அந்த 33 சீட்டுகளை என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஜாதகம், ஜோசியம் எல்லாம் பொய்யா கோபால்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் அனுமோகன் 2024 ஆம் ஆண்டு சுனாமி வரும், இலங்கை தீவே காணாமல் போகும் என தனது ஜோதிட கணிப்பை தெரிவித்திருந்தார். அது போல் மீண்டும் சென்னையில் வெள்ளம் வரும் என்றும் சில பகுதிகள் காணாமல் போகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10 ஆவது உலக கோப்பை. இனி 25 க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா ஜெயித்துக் கொண்டே இருக்கும். 30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள் என்றார். ஆனால் உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து வந்தனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications