சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கண்ணாடி" கதவு பாஜக ஆபீசில்.. நடிகைகள் என்றாலே அப்படியா.. வானதி எங்கே? கஸ்தூரி எங்கே: டாக்டர் ஷர்மிளா

காயத்ரி ரகுராம் விவகாரம் குறித்து, டாக்டர் ஷர்மிளா ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தனக்கு ஒரு அவமானம் என்றதுமே, பாஜகவின் காயத்ரி ரகுராம் கண்ணீர் வடிக்கிறாரே, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் எத்தனையோ பெண்கள் இப்படி தினம் தினம் அவமானப்படுகிறார்கள், தினம் தினம் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று திமுக ஆதரவாளர் டாக்டர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    DaisySaran - Trichy Surya விஷயத்துலயே அண்ணாமலை Action எடுக்கலைனா வேற எதுக்கு எடுப்பாரு?- Dr Sharmila

    காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு காயத்ரி ரகுராம், "நான் கட்சியை களங்கப்படுத்தவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை விடமாட்டேன். தொடர்ந்து கட்சி பணி செய்வேன் என்று காயத்ரி ரகுராம் கூறி வருகிறார்.

    இதனிடையே, அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளாவிடம், இதுகுறித்த கேள்வியை முன்வைத்தோம்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஷர்மிளா தந்த ஸ்பெஷல் பேட்டியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் நம்மிட சொன்னதாவது:

    "கனிமொழி"யை எச்.ராஜா அப்படி பேசினாரே.. காயத்ரி வாய் திறந்தாங்களா.. இப்ப மட்டும் என்னவாம்: Dr ஷர்மிளா

    சப்போர்ட்

    சப்போர்ட்

    காயத்ரிக்கு, தன் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருந்தால், இதே டெய்ஸி ஆடியோவுக்கு ரியாக்ட் செய்திருப்பாரா என்று தெரியாது.. நிச்சயம் டெய்ஸி விவகாரத்தையும் கடந்து தான் சென்றிருப்பார்.. இன்னைக்கு தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், பெண்ணுக்காக சப்போர்ட் செய்வதாக காட்டிக் கொள்ள குரல் எழுப்புகிறார்.. உண்மையிலேயே காயத்ரி, பெண்களுக்கு பாதுகாப்பை விரும்புபவராக இருந்தால், அல்லது பெண்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருந்திருந்தால், எச். ராஜா, என்னைக்கு கனிமொழியை பேசினாரோ, அன்னைக்கு காயத்ரி குரல் கொடுத்திருக்க வேண்டும்..

     கனிமொழி

    கனிமொழி

    எச்.ராஜா, கனிமொழியை எவ்வளவு தரக்குறைவாக பேசினார்.. இதே குஷ்புவையும் அன்று தரக்குறைவாக பேசினாரே.. அப்போது குஷ்பு காங்கிரஸில் இருந்தார்.. அப்போவெல்லாம் காயத்ரி ஏன் வாய் திறக்கவில்லை.. பிஸ்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்று வெளியே அனுப்பினார்களே, அப்போவெல்லாம் காயத்ரி வாய் திறக்கலையே.. அப்படின்னா, உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் கோபப்படுவீங்க.. கொந்தளிப்பீங்களா? அதனால், காயத்ரியின் விவகாரம் சுயநலமாகவே, எனக்கு தோன்றுகிறது.

     வார் ரூம்

    வார் ரூம்

    கோபத்தில் காயத்ரி ட்வீட்களை போட்டாலும் சில முக்கியமான விஷயங்களையும் பதிவு செய்துள்ளார்.. வார் ரூம் வைத்து செயல்படுவதாக சொல்கிறார்.. ஒரு கட்சியை புரமோட் செய்வதற்கு பதிலாக, தனி நபரை புமோட் செய்வதற்காக அந்த வார் ரூம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.. பாஜக ஐடி விங் எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு இந்த குற்றச்சாட்டு தெளிவுபடுத்துகிறது.. அண்ணாமலைக்கென்று தனியாக ஒரு ஐடி விங் செயல்படுவதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இதற்கு முன்னமேயே வந்தன.. அதேசமயம், தனக்கு ஒரு அவமானம் என்றதும் இன்னைக்கு காயத்ரிக்கு கோபம் வருகிறது, ஆனால், இப்படி எத்தனையோ பெண்கள் குமுறி கொண்டுதான் இருக்கிறார்கள்.

     டைம்லைன்

    டைம்லைன்

    பாஜகவை எதிர்த்து கருத்துக்களை செய்யக்கூடிய பெண்கள், அதன் சித்தாந்தங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய பெண்கள், இதைவிட பன்மடங்கு, அச்சுறுத்தல்களையும், இதே போன்ற கொச்சையான வார்த்தைகளையும், இதேபோன்ற அவமானங்களையும் தினம் தினம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம்... ஃபேஸ்புக், ட்விட்டர் என டைம்ம்லைன்களிலேயே இப்படி கொச்சையாக பதிவிடுகிறார்கள் அதையும் கடந்துதான் வந்துள்ளோம்.. பாஜக என்றில்லை, நிறைய பேர் இப்படி செய்கிறார்கள்..

     கண்ணாடி ஜன்னல்

    கண்ணாடி ஜன்னல்

    ஆனால், தங்கள் தட்சியின் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கள், தங்கள் கட்சியின் சித்தாந்தத்தை உள்வாங்கியவர்கள் எல்லாம் இப்படி தரக்குறைவாக செய்ய மாட்டார்கள்.. பாஜகவில் மட்டுமல்ல, இது எல்லா கட்சிகளை சார்ந்த பெண்களுக்கும் இப்படியான அவலங்கள் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அன்று கேடி ராகவன் வீடியோ விவகாரம் வெடித்து கிளம்பும்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொன்னார் நினைவிருக்கிறதா?

     கண்ணாடி கதவுகள்

    கண்ணாடி கதவுகள்

    "என் அலுவலகத்தில் கண்ணாடி கதவுகளாக மாற்றிவிட்டேன், குஷ்பு, காயத்ரி ரகுராம், பாஜக ஆபீசுக்கு வந்தால் உள்ளே என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று சொன்னார்.. அப்படி என்றால், இதன்மூலம் 2 விஷயம் தெரியவருகிறது.. ஒன்று, இந்த கட்சி ஆபீசின் உள்ளே, இதற்கு முன்னாடி என்ன நடந்தது என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்து கொள்ள முடிகிறது.. மற்றொன்று, குஷ்பு, காயத்ரியை போன்றோர்களை பற்றி என்ன மதிப்பீடுகளை அண்ணாமலை வைத்துள்ளார்? நடிகைகள் என்றாலே எப்படிப்பட்ட இவர் மதிப்பீடுகளை வைத்துள்ளார் என்பதையும் இது யோசிக்க வைத்துள்ளது..

     மூக்கை நுழைப்பேன்

    மூக்கை நுழைப்பேன்

    வடநாட்டில் நடந்த பிஸ்கிஸ் பானு விவகாரத்தில் அங்குள்ள சேனல்களில் கண்ணீர்விட்டு அழும் குஷ்பு போன்ற போலி பெண்ணியவாதிகள், இங்குள்ள இவங்க கட்சியை சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டு கதறினால், அதை கடந்து செல்கிறார்கள்.. இப்போது குஷ்பு எங்கே போனார்? கஸ்தூரி சங்கர் எங்கே போனார்? தமிழ்நாட்டில் யார் சொன்னாலும் மூக்கை நுழைப்பேன் என்று சொன்ன தமிழிசை எங்கே போனாங்க? ஏந்த ஒரு சின்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனே கூட்டம் போட்டு கேள்வி கேட்கும் வானதி சீனிவாசன் எங்கே போனாங்க? என்று கேட்டுள்ளார்.

    போக பொருள்

    போக பொருள்

    தொடர்ந்து பேசியபோது, "இவங்க எல்லாருமே தேசிய அளவில் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்தானே? இன்னைக்கு எங்கே போனாங்க? இந்த கட்சியில் இப்படியெல்லாம் இருப்பது ஆச்சரியம் எதுவும் இல்லை.. பலாத்காரம் செய்தவனையே, விடுதலை செய்து மாலை போட்டு வரவேற்றவர்கள்.. ஒரு சின்ன குழந்தையை கோயிலில் வைத்து பலாத்காரம் செய்தவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்று கொடியை பிடித்து கொண்டு போராட்டம் செய்தவர்கள்.. சட்டமன்றத்திலேயே உட்கார்ந்து ஆபாச படம் பார்த்த கட்சி இது.. இவர்களின் சனாதன தர்மத்தின்படி, பெண்களை போகப்பொருளாக பார்க்ககூடிய கட்சிதான் இது.. இவர்களின் தேவைக்கு, பயன்படுத்தி கொள்ளும் கருவியாகத்தான் பெண்களை பார்க்கிறார்களே தவிர, உண்மையிலேயே பெண்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், பெண்களுக்கு அரசியல்ரீதியான அதிகாரத்தை தர வேண்டும் என்று எந்த காலத்திலும் இவர்கள் நினைத்தில்லை.. இனிமேலும் அப்படி நினைக்க வாய்ப்பும் இல்லை" என்றார் டாக்டர் ஷர்மிளா .

    English summary
    Do you know women are getting threats because they oppose BJP, says Dr Sharmila
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X