மக்களே உஷார்.. ப்ளேவர் பார்த்து ஆணுறை வாங்க கூடாது.. என்ன பிரச்சினை வரும் தெரியுமா? எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், ஸ்ட்ராபெரி, சாக்லேட் என பல்வேறு ஃப்ளேவர்களில் வரும் ஆணுறையை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பால்வினை நோய்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. இதன் மூலம் இறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தொற்று பிரச்னைகள் சமாளிக்க முடியாமல் அதிகரிக்கத் தொடங்கின.

இந்த வகை தொற்றுக்கள் எளிதாக பரவும் தன்மை கொண்டதால் இதற்கெதிராக பயன்பாட்டுக்கு வந்ததுதான் ஆணுறை. இது வந்த பின்னர் பெரும்பாலான பாலியல் பிரச்னைகள் கட்டுக்குள் வந்தன.

 பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

ஆனாலும் தற்போதும் கூட உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் இந்த பால்வினை நோய்தொற்றை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு அதன் அறிகுறிகள் தெரிவதில்லை. இந்நிலையில், ஆணுறை பயன்பாடு தவிர்க்க இயலாததாக உள்ளது. ஆனால் இந்த ஆணுறை பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு பெரும்பாலானோர் மத்தியில் இருப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் வெறும் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்த இந்த ஆணுறை தற்போது பல்வேறு நிறங்களில் ஃப்ளேவர்களில் விற்பனையாகிறது. ஆனால் இதில் ஃப்ளேவர் இல்லாத ஆணுறையை மட்டுமே உடலுறவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 நோ ஃப்ளேவர்ஸ்

நோ ஃப்ளேவர்ஸ்

ஏனெனில், ஸ்ட்ராபெரி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர் ஆணுறைகளில் சர்க்கரை சிறிதளவு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் இது இனிப்பாக இருக்கும். இதனைய பயன்படுத்தி உடலுறவு கொள்ளும் போது இணையின் யோனியில் PH அளவு அதிகரித்துவிடும். அதாவது PH அளவு என்பது ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் மதிப்பாகும். இது ஒவ்வொன்றிற்கும் வேறுபடும் உதாரணமாக தண்ணீர் 6.5-8.5 எனும் ph அளவை கொண்டிருக்கும். இது இப்படி ஒவ்வொரு கரைசலுக்கும் வேறுபடும். அதேபோல யோனியின் புணர் புழையில் சுரக்கும் திரவங்களுக்கும் இந்த ph அளவு சரியாக இருக்க வேண்டும். இது குறைந்துவிட்டால் அந்த திரவத்தில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். அமிலம் மனிதனின் உடலை புண்ணாக்கிவிடும்.

விளக்கம்

விளக்கம்

ஃப்ளேவர் ஆணுறையை உபயோகிப்பதன் மூலம் PH அளவு குறையாது. மாறாக அதிகரித்துவிடும். இவ்வாறு அதிகரிப்பதால் உங்கள் இணையரின் யோனியில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் அவர்களுக்கு கடுமையான எரிச்சல் ஏற்படும். இது உடனடியாக தெரியாவிட்டாலும் நாளடைவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தடுக்கவே ஃப்ளேவர் ஆணுறைகளை உடலுறவின் போது பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும், வாய்வழியாக பயன்படுத்துவதற்கே இந்த ஆணுறைகள் உருவாக்கப்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கருத்தடை

கருத்தடை

என்னதான் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் 100% முழுமையான கருத்தடையை ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேபோல இதன் மூலம் எய்ட்ஸ், ஹெர்பெஸ், கோனோரியா, சிபிலிஸ் மற்றும் கேண்டிடியாசிஸ் ஆகிய தொற்று பாதிப்பிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். எனவே இவற்றை தடுக்க ஆணுறை உதவியுடன் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சந்தேகங்களுக்கு அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+