இடைத்தேர்தல் மல்லுக்கட்டு : எடப்பாடி சேலஞ்ச்.. ஓபிஎஸ் நைஸாக போடும் ‘பிளான்’.. போட்டு உடைக்குமா பாஜக?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிட தயாராகி இருக்கும் சூழலில், ஓபிஎஸ் என்ன முடிவெடுப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தனது பலத்தை நிரூபிக்கும் களமாக இந்த இடைத்தேர்தலை ஈபிஎஸ் பயன்படுத்தப்போகும் நிலையில், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் அதிமுகவும் போட்டியிடவுள்ளன.

சந்திப்பு
இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து விவாதித்த நிலையில், தமாகா அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதிமுக போட்டியிடும்
தமாகா இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய நிலையில், ஈபிஎஸ் தரப்பு அதிமுக போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் அதிமுக - தமாகா கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் இன்று காலை அறிவித்தார். இதற்கிடையே, திமுக-காங்கிரஸ் கூட்டணியும் இடைத்தேர்தல் சீட்டை இறுதி செய்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என நேற்று அறிவித்தது.

வேட்பாளர் யார்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ராமலிங்கம் 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சில காலம் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவரை மீண்டும் களமிறக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மா.செக்கள் கூட்டம்
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளரைக் களமிறக்க திட்டம் இருக்கிறதா? அல்லது, இடைத்தேர்தலை ஓபிஎஸ் அணி புறக்கணிக்குமா, அல்லது வேறு ஏதேனும் முடிவை எடுப்பார்களா என்பது ஜனவரி 23ஆம் தேதிக்குப் பிறகே வெளிப்படையாகத் தெரியவரும்.

வேட்பாளர் ரெடி?
எனினும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சிலரை சென்னைக்கு அழைத்துப் பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தமாகா அல்லது பாஜக போட்டியிட்டிருந்தால் கூட, ஓபிஎஸ் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஈபிஎஸ் தரப்பே களமிறங்கி இருப்பதால், தனது நிலையை தக்கவைக்க ஓபிஎஸ் நிச்சயம் வேட்பாளரை இறக்குவார் என்கிறார்கள்.

3 விஷயங்கள்
அதிமுக யாருக்கு என்ற மோதலில் ஓபிஎஸ்ஸுக்கு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வலுவான இடத்தைப் பிடித்தால், கட்சியில் தனக்கு இடமே இல்லாமல் போகும் என்பது ஓபிஎஸ்ஸின் எண்ணமாக இருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பெற முயல்வார் என்பதால், அதற்கு எதிராக காய்நகர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.
இதன் காரணமாக, ஓபிஎஸ்ஸும் தனது அணி சார்பில் நிச்சயம் இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் ஆதரவு?
அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் இருக்கும் பாஜக இன்னும் இதுகுறித்து எதையும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக - அதிமுக தலைவர்கள் இனிமேல் தான் சந்தித்துப் பேச உள்ளனர். இந்நிலையில், ஓபிஎஸ், பாஜகவிடம் தான் அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு கோருவாரா என்ற எதிர்பார்ப்புகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. இதுவரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் விவகாரத்தில் போக்கு காட்டி வரும் பாஜக, இதில் யாருக்கு ஆதரவு என தெளிவாக உணர்த்தும் நிலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications