ஆ.. அதென்ன? வானத்தை பார்த்து வாவ் சொன்ன தமிழக மக்கள்! அது எலான் மஸ்க் சாட்டிலைட் இல்லையாம்.. அப்போ?
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு வானில் ரயில்போன்று புள்ளி புள்ளியாக கோடுகள் இருந்ததை பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். புதுவிதமாக வானில் தோன்றிய இந்த வடிவம் என்ன என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் நேற்று பரவலாக பல மாவட்டங்களில் வானத்தில் ஒளிரும் ரயில் போன்ற தோற்றம் திடீரென தெரிந்து இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலர் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் இந்த தோற்றத்தை மக்கள் வியந்து பார்த்து இருக்கின்றனர். இது நட்சத்திர கூட்டமா அல்லது வேறு ஏதேனும் செயற்கைக்கோளா என்ற கேள்வியோடு இரவு மக்கள் வானைப் பார்த்தபடி நின்றனர்.

வெளிச்சப் புள்ளி
இருள் சூழல் வானில் தோன்றிய அந்த வெளிச்சப் புள்ளிகள் மின்னியபடி வரிசையாக நகர்ந்து சென்றது மக்களை ஆச்சரியம் அடைய செய்ததோடும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. நேற்று இரவு சுமார் 7:00 மணி அளவில் வானில் திடீரென்று ரயில் போன்று நகரும் இந்த வெண்ணிற ஒளி புள்ளிகள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றன.

20க்கும் அதிகமான புள்ளிகள்
4 முதல் 5 புள்ளிகள் தொடக்கத்தில் வரிசையாக இருந்ததைபோல் தெரிய தொடங்கிய நிலையில், போகபோக இந்த எண்ணிக்கை அதிகரித்து 20 க்கும் அதிகமான புள்ளிகள் வரிசையாக தெரிய தொடங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற வெள்ளை நிற புள்ளி கோடு வானில் தென்படுவது முதல் முறை கிடையாது.

அக்டோபர் மாதத்தில் தெரிந்த கோடு
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் அச்சு அசலாக இதேபோன்ற வெள்ளை நிற ஒளிப்புள்ளிகள் வரிசையாக சாய்ந்த கோடு வடிவத்தில் வானில் காட்சியளித்து இருக்கிறது. இதேபோன்று உத்தர பிரதேசம், பீகார் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற வெள்ளை நிற ஒளி புள்ளிக்கோடு காட்சிகள் தென்பட்டது.

எலான் மஸ்க்
அப்போதும் இதை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள ஸ்டார் லிங்க் எனப்படும் பல செயற்கை கோள்களின் தொகுப்பு என்று கூறப்பட்டது. உலகில் உள்ள மக்கள் தொடர்புக்கு எட்டாத பகுதிகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டதே ஸ்டார் லிங் செயற்கைக்கோள்கள்.

42,000 செயற்கைக்கோள்
2015 ஆம் ஆண்டில் இருந்தே 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இதனை விண்ணில் செலுத்தி வருகிறது. இது வரை 13 பிரிவுகளாக 775 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி உள்ளது. சூரிய ஒலி சக்தி மூலம் இயங்கி வரும் இந்த ஸ்டார் லிங் திட்டத்தில் 12,000 பிரிவுகளை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் 42,000 செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றி வர இருப்பதாக கூறப்படுகிறது.

பழைய செய்தியா?
இது தொடர்பாக வெளியான செய்தி பழையது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அது செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி பழைய புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறதே தவிர இந்த நிகழ்வு புதியதுதான். நமது ஒன் இந்தியா செய்தியாளர்களும் இதை பார்த்து படம் பிடித்து உள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications