ஓட்டுநர், நடத்துனர்கள் போதையில் பணிக்கு வந்தால் டிஸ்மிஸ்.. சிறை.. அரசு போக்குவரத்து கழகம் அதிரடி
சென்னை: ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் ரகு போதையில் பேருந்தை இயக்கினார். பஸ் தாறுமாறாக ஓடி கார் மீது மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அச்சமடைந்த பயணிகள் பேருந்து டிரைவரை பரிசோதித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் ரகுவை தொடர்ந்து பஸ்சை இயக்கவிடாமல் அங்கிருந்த பொதுமக்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சட்டப்படி குற்றம்
இந்தநிலையில் போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும்.

மது அருந்தக்கூடாது
மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது.

பணியில் இருந்து டிஸ்மிஸ்
மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை, அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் மேற்கொள்ளப்படும்' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு தேவை
எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கைக்கு பின்னராவது போக்குவரத்துக்கழக டிரைவர் கண்டக்டர்கள் போதையில் பணிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. பல நூறு உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள டிரைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications