சர்வதேச சந்தையில் கச்சா எண்னெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் டீசல் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்து இருப்பதால், கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இருநாடுகளும் தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால், சர்வதெச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

crude oil prices Will petrol and diesel prices fall in India

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது

மேலும், ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் எச்சரித்து இருந்தார். இதற்கிடையே, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தற்போது எரிசக்தி போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது இந்த ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் எண்ணெய் ஆலைகள் உள்ளிட்ட எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாது என்று கூறியிருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.5 சதவீதம் குறைந்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் டீசல் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்து இருப்பதால், கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும், இந்த தாக்குதல் நிறுத்தம் தொடருமா? இல்லை இடையில் முறிந்துவிடுமா? என்பதை பொறுத்தே விலை மாறுபாடு நீடிப்பது தெரிய வரும் என்று சர்வதேச வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

டீசல் பற்றாக்குறை உள்ளது

குளிர்காலம் நெருங்கும் நிலையில், பல முக்கிய சந்தைகளில் டீசல் தேவை வழக்கமாக அதிகரிக்கும். எனவே, இந்தியாவை பொறுத்தவரை இந்த விலை குறைவு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்பதே நிபுணர்கள் கருத்தாக உள்ளது. மூத்த பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியதாவது:-

விவசாயம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு டீசல் முக்கிய எரிபொருளாக உள்ளது. உலகளாவிய எண்ணெய் பயன்பாட்டில் டீசலின் பங்கு கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவின் ஏற்றுமதி குறைந்துள்ளதால், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது உலக அளவில் நாளொன்றுக்கு சுமார் 16 லட்சம் பேரல் டீசல் பற்றாக்குறை நிலவுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

எனவே, சேதமடைந்த ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதைப் பொறுத்தே நிலவரம் தெரியும். வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, பரவலான எரிபொருள் பற்றாக்குறை நீடிக்கும்.எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக ரஷ்யா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்ய டிரம்ப் தயாராக இருப்பதை அவரது சமீபத்திய ஒப்பந்தம் காட்டுகிறது" என்றார்.

பொருளாதார நிபுணர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்து இருந்தாலும், அது எவ்வளவு நாட்கள் நீடிக்கும், விநியோகம் சீராக இருக்குமா? என்பதை பொறுத்தவே விலை வீழ்ச்சி தொடர்ந்து இருக்குமா? என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+