துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்:முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : துபாய் Deira Burj Murar பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துபாய் Deira Burj Murar அல் ராஸ் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகம்மது ரஃபீக் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்.

மேலும் கேரளாவை சேர்ந்த மலப்புரம் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி ஆகியோரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் துபாய் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 2 பேரின் உடல்களை விரைவாக தமிழ்நாடு கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications