Dubai lottery: இந்த ஊர் என்ன விலைனு கேளு.. துபாய் லாட்டரியில் குமாருக்கு அடித்த அதிர்ஷ்டம்! இத்தனை கோடியா? சூப்பர்!
அபுதாபி: துபாயில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இந்தியர் ஒருவருக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ரூ.35 கோடி ஜாக்பாட் வென்றிருக்கிறார். மிகவும் ஏழ்மையான நிலையில் துபாய்க்கு வேலைக்குச் சென்ற அவர், ஒரே நாளில் கோடீஸ்வரனாகி இருக்கிறார். இதனையடுத்து அவர் தாய்நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத், துபாய் ட்ரைடாக்ஸில் டெக்னீஷியனாக மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர் செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற Big Ticket Series 278 டிராவில் முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாமை வென்றுள்ளார்.
இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தீப்குமார் ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று 20 பேர் கொண்ட குழுவாக 200669 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்தார். வெறும் மூன்று மாதங்களாக மட்டுமே இவர் அந்த பிக் டிக்கெட்டை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

துபாய் பிக் டிக்கெட் லாட்டரி
இந்த நிலையில் சமீபத்தில் வாங்கிய டிக்கெட்டுக்கு சுமார் 15 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த தகவலை பிக் டிக்கெட் நிர்வாகத்தினர் சந்திப் குமாரை தொடர்பு கொண்டு சொல்லி இருக்கின்றன. ஆரம்பத்தில் தனக்கு இவ்வளவு பெரிய பரிசுத் தொகை விழுந்ததை நம்ப முடியாமல் இருந்த சந்திப் குமார் உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர் எனக் கூறியதால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்திப் குமாருக்கு திருமணம் ஆகி இருக்கிறது. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்கின்றனர். தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் சந்திப்பு குமாருக்கு ஏற்பட்டது.
35 கோடி பரிசு
இதை அடுத்துதான் துபாய்க்கு வேலைக்கு சென்று இருக்கிறார். தற்போது கிடைத்திருக்கும் பணத்தை கொண்டு குடும்பத்தை முன்னேற்ற முடியும் எனக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட மகிழ்ச்சியை முதல் முறையாக உணர்கிறேன். இந்த பரிசுத் தொகை எனது குடும்பத்தை முன்னேற்ற உதவும். குறிப்பாக, என் தந்தையின் உடல்நல சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நான் இந்தியாவுக்கு திரும்பி சொந்த தொழில் ஆரம்பிக்கவும் இந்த தொகையைப் பயன்படுத்த உள்ளேன்.
ஜாக்பாட் வெற்றி
இப்போது கிடைத்த இந்த வெற்றி, தனது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நம்பிக்கையையும் வலிமையையும் தந்துவிட்டது. நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மனம் உடையாமல் பிக் டிக்கெட் வாங்கிக் கொண்டே இருங்கள்," என கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், சந்தீப்பின் வெற்றி டிக்கெட்டை தேர்வு செய்தவர், பங்களாதேஷைச் சேர்ந்த சபுஜ் மியா அமிர் ஹொசைன் தேவான். இவர் ஆகஸ்ட் 3 அன்று தனது முதல் முயற்சியிலேயே சுமார் ரூ.46 கோடி பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியருக்கு ஜாக்பாட்
அபுதாபி பிக் டிக்கெட் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறி வருகிறது. இந்த முறை சந்தீப் குமார் பிரசாத் என்ற எளிய டெக்னீஷியனின் வாழ்க்கையே தலைகீழாக மாறி, கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு குடும்பத்துக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications