திடீர்னு நேரா போய் ஸ்டாலின் சட்டையில் கை வைத்த துரைமுருகன்.. 'அன்புக் கட்டளை'.. பொதுக்குழுவில் கலகல!
சென்னை : திமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 2 மாண்ட் பிளாங் பேனாக்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் சட்டைப்பையில் இருந்து பேனாவை வேகமாக எடுத்து கீழே வைத்துவிட்டு தனது பரிசான பேனாக்களை வைத்ததால் பொதுக்குழுவில் சிரிப்பலை எழுந்தது.
மேலும், இந்த பேனாவில் தான் அவர் இனி கையெழுத்திட வேண்டும். இந்தப் பேனாவில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை அவர் வெளியிட வேண்டும் என்றும் மேடையிலேயே கேட்டுக்கொண்டார் துரைமுருகன்.

திமுக பொதுக்குழு கூட்டம்
திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து, ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்று வருகிறது.

நிர்வாகிகள் தேர்வு
திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். அதேபோல, பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். மேலும் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர். மேலும், கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் இந்த பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றினர்.

துரைமுருகன் பேச்சு
அதைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்புரையாற்றினார். அப்போது பேசிய துரைமுருகன், "1962-ம் ஆண்டு முதல் தத்தெடுப்பது போல என்னை தத்தெடுத்து பல பதவிகள் வழங்கியவர் கருணாநிதி. திமுகவின் 4-வது பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் யார் என்பதை தீர்மானித்தவர் கருணாநிதி. அப்பாவை விட புகழ்பெற்று காட்டிய ராஜேந்திர சோழனைப் போன்றவர் ஸ்டாலின்" எனப் பேசினார்.

அதை எடுத்துடு வாங்க
பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசி முடித்ததும், அதை எடுத்துட்டு வாங்க என உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடனே அவர்கள் ஒரு பாக்ஸை கொண்டு வந்தனர். அந்த பாக்ஸை பிரித்த துரைமுருகன், இரண்டு 'ரேர் கலெக்ஷன்' மாண்ட் பிளாங்க் பேனாக்களை வெளியே எடுத்து நேராக திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று, அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்துவிட்டு, தனது பரிசாக 2 பேனாக்களையும் சட்டைப் பையில் வைத்துவிட்டார்.

இதில் தான் கையெழுத்து போடணும்
ஸ்டாலினின் சட்டைப் பையில் இருந்த பேனாவை வேகமாக எடுத்து துரைமுருகன் கீழே வைத்ததும் ஸ்டாலினே அதிர்ந்து போனார். அவரது ரியாக்ஷனை பார்த்து பொதுக்குழுவில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து, இதில் தான் அவர் இனி கையெழுத்திட வேண்டும். இந்தப் பேனாவில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை அவர் வெளியிட வேண்டும் என்றும் மேடையிலேயே கேட்டுக்கொண்டார் துரைமுருகன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications