அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறை சம்மன்! ஜன.18ஆம் தேதி ஆஜராக உத்தரவு!
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜனவரி 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இதுவரை 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அதனை அரவிந்த் கெஜ்ரிவால் பெரிதாக பொருட்படுத்தவில்லை. கடைசியாக ஜனவரி 3ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனால் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 4வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். ஓராண்டாக சிறையில் இருந்து வரும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3 ஆகிய 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இப்போது 4 வது முறையாக ஜனவரி 18ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது; ''நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. என்னுடைய மிகப்பெரிய சொத்தே எனது நேர்மை தான். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலம் பாஜக எனது நேர்மையான பிம்பத்தை அழிக்க பார்க்கிறது. ''
''அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்டவிரோதமானது. நான் சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன். அதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. போலியாக வழக்குப்பதிவு செய்து ஆம்ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பார்க்கின்றனர்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications