சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“பிறந்தநாள் அன்னிக்கே எடப்பாடி பழனிசாமியை இப்படி கிண்டல் பண்ணலாமா?” - விஜய் பட இயக்குநரின் சேட்டை!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ஒரு முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் பிறந்தநாள் அன்றே எடப்பாடி பழனிசாமியை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இன்றும் தவழும் குழந்தைக்கு வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளில் ஜான் மகேந்திரன் ட்வீட் செய்துள்ளார்.

திமுகவின் பொய் விளம்பரம்... எல்லாம் அதிமுகவின் திட்டங்கள் - லிஸ்டு போட்ட எடப்பாடி பழனிசாமி திமுகவின் பொய் விளம்பரம்... எல்லாம் அதிமுகவின் திட்டங்கள் - லிஸ்டு போட்ட எடப்பாடி பழனிசாமி

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 69வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால் கடந்த ஆண்டைப் போல அ.தி.மு.கவினர் இன்று விமரிசையாகக் கொண்டாடவில்லை. இதற்கு அ.தி.மு.கவில் தற்போது நிலவி வரும் குழப்பமும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 விபத்தாக முதல்வர் பதவி

விபத்தாக முதல்வர் பதவி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஒரு விபத்தாகவே முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்புக்கு எதிராகத் திரும்பிய நேரத்தில், தானும் சிறைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா.

சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், கட்சியையும் ஆட்சியையும் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தையும் உடன் சேர்த்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி சமாதானப்படுத்தினார்.

 முழுமையாக ஆட்சி

முழுமையாக ஆட்சி

2017 பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது இந்த ஆட்சி நீடிக்காது என்று ஆரூடம் கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல், அந்தக் கட்சியிலும் பல்வேறு பிரச்சனைகள் நடந்தன. ஆனால், எல்லாவற்றையும் மீறி எடப்பாடி பழனிசாமி, நான்காண்டுகளை கடந்து முதல்வராக இருந்தார்.

அ.தி.மு.க ஆட்சிக்காலம் முடிவடையும் வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்விக்குப் பின்னர் தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

 பல விமர்சனங்கள்

பல விமர்சனங்கள்

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றது குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அவர் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பது.

கூட்டம் ஒன்றில் சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டன. அது அவரது இமேஜுக்கு பெரிய டேமேஜாகவும் அமைந்ததை மறுக்க முடியாது.

 தவழும் குழந்தை

தவழும் குழந்தை

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகனும், விஜய் நடித்த 'சச்சின்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான ஜான் மகேந்திரன், "இன்றும் தவழும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து தவழும் பருவத்தை தக்கவைத்துக் கொண்டவருக்கு வாழ்த்துகள் எனப் பலரும் பதிவிட்டதால் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Former Chief Minister Edappadi palanisami gets trolled by Vijay movie Director John mahendran on his birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X