இது ட்ரைலர்தான் இனிதான் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது...சொத்துவரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசுத்தொகை கொடுக்காத திமுக அரசு தற்போது சொத்துவரியை உயர்த்தி சிறப்பு பரிசாக அறிவித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக முடிவெடுத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல ஆண்டுகளாக எந்த உயர்வும்‌ இல்லாததால்‌ உள்ளாட்‌சி அமைப்புகளின்‌ மொத்த வருவாயில்‌ சொந்த வருவாயின்‌ பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்‌ செலவீனம்‌ பலமடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம்‌ என பரிந்துரைக்கப்பட்ட குழுவின்‌ அறிக்கையானது அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌ சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.

100% சொத்து வரி உயர்வு

100% சொத்து வரி உயர்வு

தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின்‌ அறிக்கையின்படி, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதியில்‌ 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும்‌, சென்னையோடு 2011ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்‌சிகளில்‌ 25 சதவீதம்‌ உயர்த்திடவும்‌. மேலும்‌, சென்னையின்‌ பிரதான நகர் பகுதிகளில்‌ உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம்‌, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.

சென்னையில் 150% உயர்வு

சென்னையில் 150% உயர்வு

1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம்‌ உயர்த்தவும்‌, சென்னையோடு 2011-ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌, 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம்‌, 1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம்‌ உயர்த்தவும்‌ பரிந்துரைந்துள்ளது. சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, சென்னையோடு 2011-ல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌, தொழில்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம்‌, சொத்து வரியினை உயர்த்தவும்‌ குழு பரிந்துரைத்துள்ளது. மேற்படி மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதனை செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு

1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு

1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ பிரதான பகுதியில்‌ 6240 சதவீதமும்‌ ஆகவும்‌, பெருநகர சென்னை மாநகராட்‌சியின்‌ பிற பகுதிகள்‌, மாநிலத்தின்‌ பிற 20 மாநகராட்‌சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்‌சிகளில்‌ 88 சதவீதமும்‌ அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள்‌ 1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவுள்ள வீடுகளில்‌ வசிப்பதால்‌ இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது. எனவே, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளைப்‌ பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப்‌ பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின்‌ தீர்மானம்‌ பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் கண்டனம்

இபிஎஸ் கண்டனம்

சொத்துவரி உயர்வுக்கு எதிர்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது, இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+