அடிமடியிலேயே "கை" வைத்த எடப்பாடி! கோர்டில் வைத்த 2 புதிய பாயிண்ட்! ஓபிஎஸ்ஸுக்கு செக் மேட்! என்னாச்சு
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இதுவரை வைக்காத இரண்டு முக்கியமான வாதங்களை இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தது.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை எதையும் விதிக்க போவதில்லை.
டெலிவரி வேலை மூலம் தினசரி வருமானம், வாராந்திர இன்சென்டிவுடன் 30,000 வரை சம்பாதியுங்கள்
இதனால் இன்றே இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைக்கும். அடுத்த வாரம் பெரும்பாலும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று சில பாரம்பரிய வாதங்களை வைத்தது. அவருக்கு 1 மணி நேரம் வாதம் வைக்க நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தரப்பு வைத்த வாதத்தில், உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் நிவாரணம் பெறலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று கூறியுள்ளார். இது ஓபிஎஸ் வைக்காத கோரிக்கை.

அதே நிலை
அதோடு ஜூலை 23ம் தேதிக்கு முன்பாக இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருக்கிறார். ஓபிஎஸ் வைக்காத கோரிக்கையை நீதிபதி தீர்ப்பில் வழங்கி இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று வாதத்தில் வைத்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பழைய வாதங்களை மீண்டும் வைத்தது. கடந்த பொதுக்குழு வழக்கில் வைத்த அதே வாதங்களைத்தான் எடப்பாடி தரப்பு இன்றும் வைத்தது. அதாவது பொதுக்குழு எடுக்கும் முடிவே அதிமுகவில் இறுதியானது.

மெஜாரிட்டி
மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கடந்த வாதங்களில் வைக்கப்பட்ட வாதங்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் இந்த வழக்கில் வைத்தார். இதெல்லாம் பழைய வாதங்கள் என்றாலும் இன்று எடப்பாடி பழனிசாமி 2 முக்கியமான புதிய வாதங்களை வைத்தார். இதனால் இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக சூழ்நிலை திரும்புமா என்று கேள்வி எழுந்துள்ளது.

புதிய வாதம்
புதிய பாயிண்ட் 1 - இந்த வழக்கில் கடந்த தீர்ப்பிற்கு முக்கிய காரணியாக இருந்தது பொதுக்குழு நோட்டீஸ். அதாவது பொதுக்குழு நடக்கும் என்று முறையாக நோட்டீஸ் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. நீதிபதி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவும் இந்த பாயிண்ட் முக்கிய காரணமாக இருந்தது. எப்படி நோட்டீஸ் கொடுக்காமல் பொதுக்குழுவை கூட்டினீர்கள் என்பதுதான் வழக்கில் கடந்த முறை திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக இன்று புதிய வாதத்தை எடப்பாடி தரப்பு வைத்தது.

என்ன சொன்னது
அதன்படி அதிமுக பொதுக்குழுவில் நோட்டீஸ் கொடுக்கப்படாதது பற்றி பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஏன் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று முறையிடவில்லை. மனுதாரரை தவிர வேறு யாரும் நோட்டீஸ் விவகாரம் பற்றி கேள்வி கேட்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுக்கப்படாமல் பொதுக்குழுவிற்கு தேதி அறிவிப்பு அடிப்படையில் வந்துள்ளனர். அதனால் நோட்டீஸ் கொடுக்கப்படாததை தவறு என்று கருத முடியாது என்று வாதம் வைத்துள்ளது. கடந்த முறை வைக்காத வாதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பாயிண்ட்
பாயிண்ட் 2 - அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக செயல்படும் நபர் அடிப்படை உறுப்பினரே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்து இருக்கிறார். அதாவது ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு எதிராக செயல்பட்டால் அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்து இருக்கிறார். இதன் மூலம் ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இருந்து பாதையில் வெளியேறியதால், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கலாம் என்று பொருள்படும் வகையில்.. பொதுக்குழுவை அடிப்படை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

வித்தியாசமான கோணம்
நாங்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று ஓபிஎஸ் வைத்த வாதத்தையே அவருக்கு எதிராக எடப்பாடி தரப்பு திருப்பி உள்ளது. இது ஓபிஎஸ்ஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலேயே கை வைக்கும் வாதம் ஆகும். இந்த இரண்டு வாதங்களையும் கடந்த வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி வைக்கவில்லை. அந்த இரண்டு பாயிண்டுகளை இந்த முறை எடப்பாடி வைத்து இருக்கிறார். முக்கியமாக நோட்டீஸ் விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications