சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீர்மானம் தானே கூடாது.. "இதுக்கு" தடை இல்லையே! இபிஎஸ் பலே திட்டம்.. இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு பதிலாக வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நாளில் இருந்து, ஒற்றைத் தலைமை பற்றிய பேச்சு எழுந்தது. இது அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் உச்சத்தை எட்டியது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த 9 நாட்களாக இரு தரப்பிலும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களிலும், சந்திப்புகளையும் நடத்தினர். இதன் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிமுக மூத்த நிர்வாகிகளும், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் இருந்தனர்.

    பவுன்சரோடு போன வேலுமணி! ஒரே சாலையில் இபிஎஸ்- ஓபிஎஸ் கார்! அப்போது நடந்த சம்பவம்! வாயை பிளந்த ரரக்கள் பவுன்சரோடு போன வேலுமணி! ஒரே சாலையில் இபிஎஸ்- ஓபிஎஸ் கார்! அப்போது நடந்த சம்பவம்! வாயை பிளந்த ரரக்கள்

    ஓபிஎஸ் மேல்முறையீடு

    ஓபிஎஸ் மேல்முறையீடு

    இந்தக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது.

    நீதிமன்ற தீர்ப்பு

    நீதிமன்ற தீர்ப்பு

    விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பலத்தை காட்ட திட்டம்

    பலத்தை காட்ட திட்டம்

    இந்தநிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து முக்கிய நிர்வாகிகள் முன்னிலையிலும், எடப்பாடி பழனிசாமி தனக்கான ஆதரவு இருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விவாதம் நிச்சயம்

    விவாதம் நிச்சயம்

    இதனைத்தொடர்ந்து ஒற்றைத் தலைமை பற்றியும், பொதுச் செயலாளர் பதவி குறித்தும் விவாதம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புடன் நீதிமன்றத்தை அணுக எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    It has been reported that Edappadi Palanisamy is planning to hold a referendum instead of a single leadership resolution at the AIADMK general body meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X