தீ பற்றுதே.. திருமவளவனிடம் எடப்பாடி பழனிசாமி போனில் பேசியது என்ன? உற்று பார்க்கும் திமுக.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் போன் செய்து பேசி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள தனியார் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போன் மூலம் நலம் விசாரித்து வருகின்றனர்.

நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலின் போன் செய்து.. உங்கள் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். போதிய ஓய்வு எடுங்கள், மருத்துவர் அறிவுரையை ஏற்று நடந்து கொள்ளுங்கள். ஓய்வு மிக அவசியம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஈபிஎஸ் இன்று திருமாவளவனை நலம் விசாரித்துள்ளார்.

Edappadi Palanisamy suddenly calls Thirumavalavan after breaking the alliance of AIADMK with BJP

அதன்படி திருமாவளவனிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளுக்கும், மக்கள் பணிகளுக்கும் திரும்பும்படி பணித்தார். போதிய ஓய்வு எடுத்துவிட்டு வரும்படி அவரிடம் குறிப்பிட்டார்.

விவாதம்: இவர்களுக்கு இடையிலான போன் கால் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் போன் செய்து பேசி உள்ளார்.

( அதிமுக அடித்த அடி.. அரண்ட தாமரை.. எம்பி சீட்டு போச்சு.. டெல்லிக்கு தெறித்து ஓடிய பாஜக )

அதிமுக - பாஜக கூட்டணி முற்றாக முறிந்துள்ளது. இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்று முடிவுசெய்துவிட்டோம் . 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதேபோல் தனியாக கூட்டணி அமைக்க போகிறோம் என்ற குண்டையும் போட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருவதாக செய்திகள் வந்தன.

கூட்டணி முறிவு: முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது. கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தி அதிமுக .. திமுக கூட்டணியை உடைத்து.. அதில் இருந்து விசிக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள்.

( தவறுங்க அண்ணே.. தூது போன 4 கட்சிகள்.. மீண்டும் சேரும் அதிமுக - பாஜக கூட்டணி? என்னங்க நடக்குது? )

அந்த வகையில்தான் தற்போது அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமவளவனிடம் போன் செய்து பேசி உள்ளார்.

இது திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிக்கிறது; எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக என்னும் தீயசக்தியை அழித்தொழிக்க முடியும். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே அதிமுக கூட்டணிக்கு விசிக வருவதாக சிலர் ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளோம். விசிக திமுக கூட்டணி முறிவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை, என்று விசிக கட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+